Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கரடி தாக்கியதில் முதியவர் படுகாயம்

கரடி தாக்கியதில் முதியவர் படுகாயம்

கரடி தாக்கியதில் முதியவர் படுகாயம்

கரடி தாக்கியதில் முதியவர் படுகாயம்

ADDED : ஜூன் 26, 2025 12:51 AM


Google News
பெலகாவி : கரடி பிராண்டி காயப்படுத்தியதில், முதியவர் படுகாயமடைந்தார். அடையாளம் தெரியாத வகையில் முகமே மாறியது.

பெலகாவி மாவட்டம், கானாபுரா தாலுகாவின், கனகும்பி கிராமத்தில் வசிப்பவர் தசரத பரன்டிகர், 60. இவர் தினமும் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிக்கு, மாடுகளை மேய்க்க அழைத்துச் செல்வார்.

அதே போன்று நேற்று காலை, மாடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

கனகும்பி செக்போஸ்ட் அருகில் வந்தபோது, கரடி ஒன்று எதிரே வந்தது. திடீரென வந்ததால் அவரால் தப்பியோட முடியாமல், அதனிடம் சிக்கிக் கொண்டார். கரடி, தசரத பரன்டிகரை கடுமையாக தாக்கி, முகத்தை பிராண்டியது. இதில் அவரது காது, கண், உதடுகள் கிழிந்தன. அலறல் சத்தம் கேட்டு, உதவிக்கு வந்த அப்பகுதியினர், கரடியை அடித்து விரட்டி அவரை காப்பாற்றி, பெலகாவி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கரடி தாக்கியதில், அவரது முகமே மாறியுள்ளது. தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்தை, வனத்துறை அதிகாரிகள், கானாபுரா போலீசார் பார்வையிட்டனர். இந்த சம்பவத்தால், கிராமத்தினர் கிலி அடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us