/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பள்ளி மாணவர்களுக்கு 6 நாட்கள் முட்டை, வாழைப்பழம் பள்ளி மாணவர்களுக்கு 6 நாட்கள் முட்டை, வாழைப்பழம்
பள்ளி மாணவர்களுக்கு 6 நாட்கள் முட்டை, வாழைப்பழம்
பள்ளி மாணவர்களுக்கு 6 நாட்கள் முட்டை, வாழைப்பழம்
பள்ளி மாணவர்களுக்கு 6 நாட்கள் முட்டை, வாழைப்பழம்
ADDED : ஜூன் 06, 2025 11:44 PM

பெங்களூரு,: பட்ஜெட்டில் அறிவித்ததைப் போன்று, பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்களும் முட்டை, வாழைப்பழம் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை:
பள்ளி சிறார்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கும் நோக்கில், பள்ளிகளில் மதிய உணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்கப்படுகிறது. இதுவரை வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை, வாழைப்பழம் வழங்கப்பட்டது. இனி வாரத்தில் ஆறு நாட்களும் வழங்கப்படும்.
அஜிம் பிரேம்ஜி அறக்கட்டளை ஒருங்கிணைப்பில், 1,500 கோடி ரூபாய் செலவில், வாரத்தில் ஆறு நாட்களும், மாணவர்களுக்கு, முட்டை, வாழைப்பழம் வழங்கப்படும் என, 2025 - 26ம் ஆண்டின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்காக, மாணவர்களுக்கு அளிக்கப்படும் முட்டை தரமானதாகவும், குறைந்தபட்சம் 50 கிராம் எடை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
முட்டை சாப்பிடாதவர்களுக்கு, தினமும் இரண்டு வாழைப்பழம் கொடுக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் வழங்கப்படும் உணவின் தரத்தை, பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே வாரந்தோறும் குறைந்தபட்சம் பத்து பெற்றோர்களை, மாணவர்களுடன் உணவருந்த பள்ளி தலைமை ஆசிரியர் அழைக்க வேண்டும்.
திட்டம் சரியாக செயல்படுகிறதா என்பதை, கல்வித்துறை கமிஷனர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.