/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மூன்று நாட்களுக்குள் வீடு தேடி 'இ - பட்டா' மூன்று நாட்களுக்குள் வீடு தேடி 'இ - பட்டா'
மூன்று நாட்களுக்குள் வீடு தேடி 'இ - பட்டா'
மூன்று நாட்களுக்குள் வீடு தேடி 'இ - பட்டா'
மூன்று நாட்களுக்குள் வீடு தேடி 'இ - பட்டா'
ADDED : ஜூன் 04, 2025 01:17 AM
பெங்களூரு : 'பெங்களூரு வாசிகள் தங்கள் சொத்துகளுக்கான இ - பட்டா கேட்டு பதிவு செய்த மூன்று நாட்களுக்குள் வீடு தேடி வரும்' என மாநகராட்சி அறிவித்து உள்ளது.
பெங்களூரில் குடியிருப்போர் தங்கள் வீட்டின் இ -பட்டாவை, மூன்று நாட்களுக்குள் பெற முடியும் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
இதன்படி, பெங்களூரில் குடியிருப்போர் தங்கள் சொத்துகளுக்கான இ - பட்டா கேட்டு, https://janasevaka.karnataka.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது 080 - 4920 3888 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்தவர்களின் வீட்டு வாசலுக்கே ஊழியர்கள் வருவர். ஆதார் அட்டை, சொத்து வரி ரசீது, மின்சார இணைப்பு எண் போன்றவற்றை விண்ணப்பதாரரிடம் வாங்கி, அவர்கள் சரிபார்ப்பர். இதற்கு கட்டணமாக 160 ரூபாயும்; ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற ஒரு ஆவணத்திற்கு ஐந்து ரூபாயும் வசூலிக்கப்படும். இதையடுத்து, மூன்றே நாட்களுக்குள் இ - பட்டா வழங்கப்படும். இதற்கு, மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய தேவையில்லை. வீடு தேடி வரும்.
மாநகராட்சி சிறப்பு கமிஷனர் முனீஷ் மவுத்கில் கூறியதாவது:
தற்போது, இ - பட்டா வழங்கும் பணிக்காக 91 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வரும் காலத்தில் தேவைக்கேற்ப அதிகப்படுத்தப்படும். அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. நகரில் 20 லட்சத்திற்கு மேல் சொத்துகள் உள்ளன. இதில், 5 லட்சம் இ - பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.