Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தசரா யுவ திருவிழா விசில் அடித்து ஆரவாரம்

தசரா யுவ திருவிழா விசில் அடித்து ஆரவாரம்

தசரா யுவ திருவிழா விசில் அடித்து ஆரவாரம்

தசரா யுவ திருவிழா விசில் அடித்து ஆரவாரம்

ADDED : செப் 14, 2025 04:36 AM


Google News
Latest Tamil News
மைசூரு: தசரா யுவ திருவிழாவில் விசில் சத்தம், ஆட்டம், பாட்டத்துடன் கல்லுாரி மாணவ - மாணவியர் கொண்டாடினர்.

மைசூரு மானசகங்கோரி தசரா யுவ சம்ப்ரா - 2025 நடந்து வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில், மைசூரு, மாண்டியா, விஜயபுரா, மத்துார், பெங்களூரு, ஹூன்சூர் உட்பட பல பகுதிகளில் இருந்தும் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவ - மாணவியரின் கலக்கல் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

தேசபக்தி சுதந்திர இயக்கம்; இளம் விவசாயிகள் மற்றும் வீரர்கள்; ஆதிசக்தி, பெண் வீரர்கள், வாக்களிப்பு, ஜனநாயகம், கன்னட கலாசாரம், இந்திய ராணுவத்தில் பெண் வீரர்களை கவுரவிக்கும் வகையில் பாடல்களுக்கு நடனமாடினர்.

மைசூரு விஜயநகர் அரசு மகளிர் முதல்நிலை கல்லுாரி; கொள்ளேகால் விஜயநகர் ஜே.எஸ்.எஸ்., நாட்டுப்புறவியல் பள்ளி, சரஸ்வதிபுரம் ஜே.எஸ்.எஸ்., ஐ.டி.ஐ., கல்லுாரி மாணவியரின் சிவதாண்டவ நடனம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. விடுமுறை நாளான நேற்று மாணவர்கள் உற்சாகப்படுத்த பொது மக்கள் பலரும் வருகை தந்து, கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

ஒவ்வொரு பாடலுக்கும் குழந்தைகள் உற்சாக நடனமாடினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us