/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஓட்டுநர் வெட்டி கொலை 5 தாலுகாவில் தடை உத்தரவு ஓட்டுநர் வெட்டி கொலை 5 தாலுகாவில் தடை உத்தரவு
ஓட்டுநர் வெட்டி கொலை 5 தாலுகாவில் தடை உத்தரவு
ஓட்டுநர் வெட்டி கொலை 5 தாலுகாவில் தடை உத்தரவு
ஓட்டுநர் வெட்டி கொலை 5 தாலுகாவில் தடை உத்தரவு
ADDED : மே 27, 2025 11:52 PM

தட்சிண கன்னடா : தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் பன்ட்வாலில் கோலதமஜலுவை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். சரக்கு வேன் ஓட்டுநராக உள்ளார். நேற்று மதியம் பன்ட்வாலின் குரியாலா அருகில் சரக்கு வாகனத்தில் இருந்த மணல் மூட்டைகளை கீழே இறக்கிக் கொண்டிருந்தார்.
கொலை
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், ரஹீமை அரிவாளால் சரமாரியாக தாக்கினர். தடுக்க வந்த ஷபி என்பவரையும் தாக்கினர். ரஹீம், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த ஷபி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பன்ட்வால் போலீசார் விசாரிக்கின்றனர்.
தகவல் அறிந்த பலர், மருத்துவமனை முன் கூடினர். வெறுப்பு பேச்சு பேசுபவர்களை கைது செய்தால் தான், இந்த கொலை சம்பவங்கள் நிற்கும் என்று கோஷம் எழுப்பினர்.
தகவல் அறிந்த, மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர் தினேஷ் குண்டுராவ், பெங்களூரில் இருந்தவாறே டி.ஜி.பி., சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,க்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, பேசினார்.
தடை உத்தரவு
கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பன்ட்வாலில் நடந்த கொலை சம்பவத்தால் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க பன்ட்வால், பெல்தங்கடி, புத்துார், கடபா, சுள்ளியா ஆகிய தாலுகாக்களில், 27ம் தேதி மாலை 6:00 மணி முதல் 30ம் தேதி மாலை 6:00 மணி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது' என தெரிவித்துள்ளார்.