Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தாய் பென்ஷன் பணத்துக்காக தகராறு: அண்ணனை கொன்ற தம்பிகள் கைது

தாய் பென்ஷன் பணத்துக்காக தகராறு: அண்ணனை கொன்ற தம்பிகள் கைது

தாய் பென்ஷன் பணத்துக்காக தகராறு: அண்ணனை கொன்ற தம்பிகள் கைது

தாய் பென்ஷன் பணத்துக்காக தகராறு: அண்ணனை கொன்ற தம்பிகள் கைது

ADDED : செப் 05, 2025 11:07 PM


Google News
சிக்கபல்லாபூர்: தாயின் பென்ஷன் பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட மோதலில், அண்ணனை தம்பிகள் அடித்துக் கொன்றனர்.

சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுார் தாலுகாவின் மேள்யா கிராமத்தில் வசித்தவர் ஹனுமந்தராயப்பா. இவர் பெஸ்காமில் லைன்மேனாக பணியாற்றினார். சில ஆண்டுகளுக்கு முன்பு, இவர் காலமானார். அதன்பின் அவரது மனைவி கங்கம்மாவுக்கு, மாதந்தோறும் பென்ஷன் தொகை வந்தது. இந்த பணத்தை அவர் எதிர்காலத்துக்காக சேமித்து வைத்திருந்தார்.

இந்த பணத்தின் மீது, இவரது மகன்கள் நரசிம்மமூர்த்தி, 40, ராமாஞ்சி, 35, கங்காதரப்பா, 32, ஆகியோர் கண் வைத்தனர். இதை தாயிடம் இருந்து பறிக்க திட்டம் தீட்டினர். இதை பங்கிட்டுக் கொள்வதில் சகோதரர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அவ்வப்போது கைகலப்பும் நடந்துள்ளது.

இதே காரணத்தால், நேற்று முன் தினம் மதியம், சகோதரர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் நடந்தது. மூவரும் குடிபோதையில் இருந்தனர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில், உருட்டுக்கட்டையால் தம்பிகள் இருவரும் சேர்ந்து, நரசிம்மமூர்த்தியை பலமாக தாக்கினர்.

பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். கொலையான நரசிம்மமூர்த்தியின் மனைவி மஹேஸ்வரம்மா அளித்த புகாரை அடுத்து, கவுரிபிதனுார் ஊரக போலீஸ் நிலைய போலீசார், ராமாஞ்சியையும், கங்காதரப்பாவையும் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us