/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரத்தம் சேகரிப்பில் கர்நாடகா சாதனை தினேஷ் குண்டுராவ் பெருமிதம் ரத்தம் சேகரிப்பில் கர்நாடகா சாதனை தினேஷ் குண்டுராவ் பெருமிதம்
ரத்தம் சேகரிப்பில் கர்நாடகா சாதனை தினேஷ் குண்டுராவ் பெருமிதம்
ரத்தம் சேகரிப்பில் கர்நாடகா சாதனை தினேஷ் குண்டுராவ் பெருமிதம்
ரத்தம் சேகரிப்பில் கர்நாடகா சாதனை தினேஷ் குண்டுராவ் பெருமிதம்
ADDED : ஜூன் 17, 2025 07:55 AM

பெங்களூரு : “மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி, 124 சதவீதம் ரத்தம் சேகரித்துள்ளோம்,” என, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
உலக ரத்த தானம் தினத்தையொட்டி, பெங்களூரின், சேஷாத்ரிபுரம் கல்லுாரியில், நேற்று ரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பங்கேற்று, ரத்த தானம் செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில், 1 சதவீதம் மக்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. அதற்கு தகுந்தார் போன்று, 2024 - 24ம் ஆண்டில், 8,15,402 யூனிட் ரத்தம் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நடப்பாண்டு 10,11,073 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. இது, 124 சதவீதம்.
ரத்த தானம் செய்வோர் தினம் கொண்டாடுவதன் மூலம், ரத்த தானம் செய்ய ஊக்கப்படுத்துகிறோம். ஒரு யூனிட் ரத்தம், நான்கு உயிர்களை காப்பாற்றும். எனவே இளைஞர்கள், இளம்பெண்கள் ரத்த தானம் செய்ய முன் வர வேண்டும். ரத்தம் சேகரிக்க தேவையான வசதிகளை செய்ய, மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்.
குழந்தை பிரசவித்த தாய்களின் உயிரை காப்பாற்றுவதில், ரத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. தாலுகா மருத்துவமனைகளில், பிளாஸ்மா ரத்தம் சேகரிக்க வசதி இருக்கவில்லை.
இப்போது 147 தாலுகா மருத்துவமனைகளில், பிளாஸ்மாரத்தம் சேகரிப்பு வசதி செய்யப்படுகிறது. இதற்கு தேவையான உபகரணங்கள் வாங்க, ஏற்கனவே டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது.
புதிதாக 11 அரசு ரத்த சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழைகளுக்கு, ரத்தம் மற்றும் அதன் அம்சங்களை வழங்க முடியும்.
நாட்டிலேயே முதன் முறையாக, மாதிலத்தில் மிக அதிகமான ரத்தம் சேகரிக்கும் மையங்கள் தரம் உயர்த்தப்படுகின்றன. இங்கிருந்து தரமான ரத்தம், மருத்துவனைகளுக்கு வழங்கப்படும்.
அரசு சார்ந்த ஒன்பது ரத்த போக்குவரத்து வாகனங்கள் செயல்படுகின்றன. புதிதாக நான்கு வாகனங்கள் வாங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.