Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த டி.ஜி.பி., அலோக் குமார்

 அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த டி.ஜி.பி., அலோக் குமார்

 அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த டி.ஜி.பி., அலோக் குமார்


ADDED : மே 21, 2026 10:19 PM

Follow on Google

ADDED : மே 21, 2026 10:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: சிறையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே அறையில் தங்கியிருக்கும் கைதிகளை, வேறு அறைகளுக்கு மாற்ற சிறைத்துறை டி.ஜி.பி., அலோக்குமார் உத்தரவிட்டு உள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை உட்பட பல சிறைகளிலும் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் என்பதை காட்டும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இதை தடுக்கும் முயற்சியில், சிறைத்துறை டி.ஜி.பி., அலோக்குமார் ஈடுபட்டுள்ளார்.

அவர் கூறியதாவது:

சிறையில் நீண்ட காலமாக ஒரே அறையில் கைதிகள் தங்கியிருக்கின்றனர். இவர்கள் தங்களுக்குள் நெருக்கமாக பழகி கொள்கின்றனர். இவர்களே சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், சிறையில் நீண்ட நாள் இருக்கும் கைதிகள், தங்களுக்கு பிடித்த அறையில் தங்குவதற்கும் அனுமதிக்கப்படுகிறது.

இந்த முறையை மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. சிறையில் ஒரே அறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் கைதிகளின் அறைகளை மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap