/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கோதாவரி உபரி நீர் திறப்பு தேவகவுடா எதிர்ப்பு கோதாவரி உபரி நீர் திறப்பு தேவகவுடா எதிர்ப்பு
கோதாவரி உபரி நீர் திறப்பு தேவகவுடா எதிர்ப்பு
கோதாவரி உபரி நீர் திறப்பு தேவகவுடா எதிர்ப்பு
கோதாவரி உபரி நீர் திறப்பு தேவகவுடா எதிர்ப்பு
ADDED : ஜூன் 23, 2025 09:29 AM

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு, 'கங்கா சாம்ராதா ஸ்ரீ புருஷ' விருது வழங்கும் விழா நேற்று பெங்களூரில் நடந்தது. பல மடாதிபதிகள் பங்கேற்றனர்.
தேவகவுடா பேசியதாவது:
சித்ரதுர்கா, துமகூரு, கோலார், பெங்களூரு ரூரல் மாவட்டங்களில் குடிநீர் பிரச்னை கடுமையாக உள்ளது. கோதாவரி உபரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட கூடாது. அப்படி செய்தால் கர்நாடகாவுக்கு தான் அநீதி. கர்நாடகாவும் குடிநீர் பிரச்னையை சந்திக்கிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன். இந்த பிரச்னையை தீர்க்க அவரால் மட்டுமே முடியும்.
என்னுடைய 70 ஆண்டு அரசியல் வாழ்க்கையில், அனைத்து சமூகமும் எனக்கு ஆதரவாக இருந்தது. என் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் உள்ளேன். எனக்கு கால்கள் வலிக்கலாம். ஆனால், தலை இன்னும் கூர்மையாக உள்ளது. என்னுடைய கஷ்டமான காலக்கட்டத்தில் மனைவி சென்னம்மா எனக்கு உறுதுணையாக இருந்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.