ADDED : ஜூன் 27, 2025 11:13 PM
டிசம்பர் புரட்சியா?
டிசம்பரில் அரசியல் புரட்சி நடக்கும் என, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா கூறியுள்ளார். அது என்ன புரட்சியோ, எனக்கேதும் தெரியவில்லை. டில்லியில் புதிதாக அரசு இல்லத்துக்கு, நான் குடிபெயர்ந்துள்ளேன். எனவே என் வீட்டுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அசோக் வந்திருந்தார். நாங்கள் அண்ணன், தம்பிகள். மரியாதை நிமித்தமாக, அவர் என்னை சந்தித்தார். மாநில பா.ஜ., தலைவர் மாற்றம் குறித்து, எனக்கு தகவல் தெரியாது. மலை மஹாதேஸ்வரா மலையில், நான்கு புலிகள் இறந்தது எனக்கு வருத்தம் அளிக்கிறது. என்ன காரணத்தால் புலிகள் இறந்தன என்பது குறித்து, விசாரணை நடக்க வேண்டும்.
- குமாரசாமி,
மத்திய அமைச்சர், கனரக தொழிற்துறை