ADDED : ஜூன் 10, 2025 02:25 AM
சிக்கபல்லாபூர்: பைக்கில் சென்ற தம்பதி மீது, தனியார் பஸ் மோதியதில் தம்பதி உயிரிழந்தனர்.
சிக்கபல்லாபூர் மாவட்டம், சித்லகட்டா தாலுகாவின், சன்னஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரப்பா, 52. இவரது மனைவி பேபிம்மா, 45. இவர்களின் மகளை, சிந்தாமணியின், ஹிரணபள்ளி கிராமத்தில் வசிக்கும் இளைஞருக்கு, திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
பணி நிமித்தமாக தம்பதி, நேற்று காலை பைக்கில் சிந்தாமணி நகருக்கு வந்தனர். பணியை முடித்துக் கொண்டு, மகளை பார்ப்பதற்காக புறப்பட்டனர்.
காகதி அருகில் சென்றபோது, வேகமாக வந்த தனியார் பஸ் மோதியது. இதில் பைக்கில் இருந்து கீழே விழுந்த தம்பதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தால், அந்த சாலையில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு வந்த சிந்தாமணி ஊரக போலீசார், போக்குவரத்தை சீரமைத்தனர்.