ADDED : ஜூன் 28, 2025 03:02 AM

ஷிவமொக்கா : மின்சாரம் பாய்ந்த மனைவியை காப்பாற்றச் சென்று கணவரும் உயிரிழந்தார்.
ஷிவமொக்கா மாவட்டம், சொரபாவின் கப்பகளேலா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணப்பா, 55, வினோதி, 42. இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளார்.
வீட்டின் முன் துணிகளை உலர்த்துவதற்காக இரும்புக் கம்பிகள் கட்டப்பட்டு உள்ளன. வீட்டின் மின் மோட்டார் ஒயரும், இதன் கம்பியில் சுற்றப்பட்டிருந்தது. மாவட்டத்தில் சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், மின் ஒயர் நனைந்திருந்தது.
கம்பியில் துணிகளை வினோதி உலர்த்த முயன்றார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதை பார்த்த கிருஷ்ணப்பா, மனைவியை காப்பாற்ற முயற்சித்தார். அப்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். வீட்டின் முன் கணவன் - மனைவி விழுந்திருப்பதை பார்த்த அப்பகுதியினர், போலீசாருக்கும், மின் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த சொரபா போலீசார், உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரிக்கின்றனர்.