ADDED : ஜூன் 27, 2025 11:26 PM
நெத்திலி கருவாடு வறுவல் செய்யும் முன்பு, ஒரு பாத்திரத்தில் கருவாடை போட்டு வெந்நீர் ஊற்றி சுத்தம் செய்து வறுத்தால் வறுவல் சுவை சூப்பராக இருக்கும்.
கோதுமை ரவையை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த பின், மிளகாய், பெருங்காயம் சேர்த்து அரைத்து தோசை ஊற்றினால் சுவையாக இருக்கும்.
சிக்கன், மட்டன் கிரேவி சமைக்கும்போது தக்காளியுடன், சிறிதளவு பீட்ரூட் சேர்த்து அரைத்து கொதிக்கும் கிரேவியில் ஊற்றினால் கூடுதல் சுவை கிடைக்கும்.
புளிக்குழம்பு செய்யும்போது, குழம்பு கொதிநிலையில் மிளகும், சீரகமும் சேர்த்து அரைத்த பொடியை துாவினால் சுவையாக இருக்கும்