/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆமதாபாத் விமான விபத்தில் காங்கிரஸ் அரசியல் செய்யாது ஆமதாபாத் விமான விபத்தில் காங்கிரஸ் அரசியல் செய்யாது
ஆமதாபாத் விமான விபத்தில் காங்கிரஸ் அரசியல் செய்யாது
ஆமதாபாத் விமான விபத்தில் காங்கிரஸ் அரசியல் செய்யாது
ஆமதாபாத் விமான விபத்தில் காங்கிரஸ் அரசியல் செய்யாது
ADDED : ஜூன் 17, 2025 08:15 AM

பெங்களூரு : “ஆமதாபாத் விமான விபத்தில் காங்கிரஸ் அரசியல் செய்யாது; இறந்தவர்களின் உடலை வைத்து அரசியல் செய்வது ம.ஜ.த., - பா.ஜ.,வின் வேலை,” என, துணை முதல்வர் சிவகுமார் காட்டமாக தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஆமதாபாத் விமான விபத்து போன்று, இனி உலகில் எங்கும் நடக்கக்கூடாது. இதில், பலர் எரிந்து உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் சிலரை சந்தித்துப் பேசினோம். காங்கிரஸ் சார்பில் சம்பவ இடத்திற்கு சென்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்தில் காங்கிரஸ் அரசியல் செய்யாது. இறந்தவர்களின் உடலை வைத்து அரசியல் செய்வது ம.ஜ.த., - பா.ஜ.,வின் வேலை. இந்த விஷயத்தில் பல தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. எனவே, அது எதுவும் தெரியாமல் விமர்சனம் செய்வது சரியல்ல. மத்திய விமானத்துறை அமைச்சரை விமர்சனம் செய்ய மாட்டேன்.
மத்திய அமைச்சர் குமாரசாமி மிக சந்தோஷமாக இருக்கிறார். நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.