/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கிறிஸ்துவ துணை ஜாதிகள் நீக்கம் எதிர்ப்புக்கு அடிபணிந்தது காங்., அரசு கிறிஸ்துவ துணை ஜாதிகள் நீக்கம் எதிர்ப்புக்கு அடிபணிந்தது காங்., அரசு
கிறிஸ்துவ துணை ஜாதிகள் நீக்கம் எதிர்ப்புக்கு அடிபணிந்தது காங்., அரசு
கிறிஸ்துவ துணை ஜாதிகள் நீக்கம் எதிர்ப்புக்கு அடிபணிந்தது காங்., அரசு
கிறிஸ்துவ துணை ஜாதிகள் நீக்கம் எதிர்ப்புக்கு அடிபணிந்தது காங்., அரசு
ADDED : செப் 20, 2025 11:09 PM

கதக்: ''ஜாதிவாரி கணக்கெடுப்பு பட்டியலில் இருந்து, கிறிஸ்துவ துணை ஜாதிகள் நீக்கப்படும்,'' என, முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக்கு சித்தராமையா அரசு அடிபணிந்துள்ளது.
கர்நாடகாவில் நாளை முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு துவங்கப்பட உள்ளது. ஏற்கனவே உள்ள ஜாதிகள், துணை ஜாதிகள் தொடர்பான பெயர் பட்டியலை, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வெளியிட்டு இருந்தது.
இதில் புதிதாக 331 துணை ஜாதிகள் சேர்க்கப்பட்டன. குறிப்பாக கிறிஸ்துவர் என்ற பிரிவின் கீழ் புதிதாக 47 கிறிஸ்துவ துணை ஜாதிகள் சேர்க்கப்பட்டது, சர்ச்சையை கிளப்பியது.
கிறிஸ்துவ துணை ஜாதிகள் மூலம், அரசு மதமாற்றத்தை ஊக்குவிப்பதாக, எதிர்க்கட்சியான பா.ஜ., கடுமையாக குற்றஞ்சாட்டியது. கிறிஸ்துவ துணை ஜாதிகள் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும், கோரிக்கை எழுந்தது. கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடமும் பா.ஜ., மனுக் கொடுத்தது.
நீண்டகால சிக்கல் இதையடுத்து கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதிய கடிதத்தில், 'ஜாதி பெயர்களில் கிறிஸ்துவ அடையாளங்களை சேர்ப்பது சமூகத்தில் குழப்பம், நீண்டகால சிக்கல்கள், சரிசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்த கூடும். இதனால் எந்த சமூகமும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்துவர் பிரிவில் புதிய ஜாதிகளை சேர்ப்பது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கதக்கில் சித்தராமையா நேற்று இரவு அளித்த பேட்டி:
ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வெளியிட்ட ஜாதிகளின் பெயர் பட்டியலில், கிறிஸ்துவ பிரிவின் கீழ் உள்ள துணை ஜாதிகள் நீக்கப்பட்டுள்ளன. இதை நீக்கியது, நான் இல்லை. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சட்டபூர்வ அமைப்பு. அவர்கள் எடுக்கும் முடிவில் நாங்கள் தலையிட முடியாது. நாங்கள் வழிகாட்டுதல்களை வழங்குவோம்.
கிறிஸ்துவ பிரிவில் துணை ஜாதிகளை சேர்ப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று, கவர்னர் தாவர்சந்த் கெலாட் அவரது சொந்த முயற்சியில், எனக்கு கடிதம் எழுதவில்லை. பா.ஜ.,வினர் கொடுத்த கடிதத்தை எனக்கு அனுப்பி வைத்துள்ளார். அரசியலுக்காக பா.ஜ., இதை செய்கிறது.
1.75 லட்சம் ஆசிரியர்கள் காங்கிரஸ், ஜாதிகளை எப்போது உடைத்தது? மக்களின் சமூக கல்வி, பொருளாதார நிலையை அறிந்து கொள்ள வேண்டும். இதை அறிந்து கொள்ளாமல், பா.ஜ.,வினர் கூறுவது போன்ற கொள்கையை வகுக்க முடியுமா?
பஞ்சமசாலி ஜகத்குரு மடத்தின் மடாதிபதி வசனானந்த சுவாமி, கணக்கெடுப்பை சதி என்று கூறுகிறார். மத்திய அரசு நடத்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சதி என்று கருத முடியுமா?
எங்கள் அமைச்சர்கள் யாரும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. கணக்கெடுப்பு பணியில் 1.75 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுவர். ஒவ்வொரு ஆசிரியரும் 120 முதல் 150 வீடுகளில் தினமும் கணக்கெடுப்பு நடத்துவர்.
இவ்வாறு அவர் கூறினார்.