Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

ADDED : டிச 01, 2025 05:01 AM


Google News
அலட்சியமா, வெறுப்பா?

நா டு முழுவதும் அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடினாங்க. ஆனால், கோல்டு சிட்டி தொகுதியில் முனிசி., வட்டாட்சியர் அலுவலகங்களில் இது பற்றி கண்டுக்கல.

அதிகாரம் உள்ளவங்க அலட்சியம் காட்டியதாக பலரின் வெறுப்புக்கு ஆளாகிட்டாங்க. இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அரசியலமைப்பு சட்டம் பற்றிய விபரம் தெரியலயா. தெரிந்தும் வெறுப்பு காட்டுறாங்களா.

அரசியல் அமைப்பு சட்டத்தை அலட்சியம் காட்டியவர்களை ஆட்சியாளர்கள் தான் கண்டிக்க வேணும்ன்னு நீல சட்டைக்காரர்கள் வெளிபடுத்தி வர்றாங்க.

சட்டப்பிதா சிலை அருகே பூ கட்சி 'மாஜி' அசெம்பிளிக்காரர் திடீரென நானும் கோல்டு சிட்டியில் இருக்கிறேன் என்று தலைகாட்டினார். ஆனால் சட்டப் பிதாவை தெய்வமாக மதிக்கிற கட்சியும், அதன் தலைவரும் இதனை கண்டுக்காதது பற்றி தான் 'ரீல்' ஓடுகிறது.

அடங்கலயே

ப தவிக்காலம் காலாவதி ஆகியும் கூட இப்பவும் முனிசி.,யின் பழைய ஜெராக்ஸ் கவுன்சிலர்களின் ஆட்கள் 'ஓவர் டைம்' வேலை செய்து வராங்க. அவங்களோட ஆட்டம் அடங்கலயே.

சில ஆபீசர்களுக்கு இவர்கள் தலைவலியை ஏற்படுத்துறாங்கன்னு பொறுத்துக்கொள்ள முடியாதவங்க வருத்தப் படுறாங்க. ஆபீஸ் ஊழியர்களை மிரட்டுறாங்களாம்.

அசம்பிளிக்காரர் பதவி இருக்கிறவரைக்கும் எங்களுக்கு பணிந்து தான் நடக்கவேணும்னு கை விசிறிகள் இப்பவும் டுபாக்கூர் வேலைகளை முடித்து தர வேணும்னு பவர் காட்டுறாங்களாம். முனிசி., வட்டாரங்கள் கைக்கார அசெம்பிளிக் காரருக்கு எதிர்ப்புக் குரல் 'ஓவரா' ஒலிக்குதே.

விரைவில் ரிலீஸ்

ஏ. ஆர்.டி.ஓ., ஆபீஸ் கோல்டு சிட்டியிலும் பரபரப்பா இயங்குவதாக தெரிவிக்க, அதிரடியா பழைய வாகனங்களை பறிமுதல் செய்ததா சொல்றாங்க. ஏன்னா அவங்களுக்கு மாமூல் வந்து சேரலயாமே. இங்கு அளவில்லாமல் தினமும் முறைகேடு நடப்பதாக மேலிடம் வரை புகார் போயிருக்கு. ஆனாலும் மேலிடத்துக்கு 'கப்பம்' சரியா தானே போகுது. நம்மால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு தெனாவட்டா இருந்த ஆபீசருங்கள, மேலிடம் உஷாராக இருக்க சொன்னாங்களாம். அதன் ஆக் ஷன் தான், ஓல்டு வாகனங்கள் பறிமுதல். அந்த வாகனங்களை விரைவில் ரிலீஸ் செய்திடுவதாக தெரிவிச்சிருக்காங்க. பல ஆயிரம் ரூபாய் கைமாறியதாக தெரிய வந்திருக்கு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us