Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செக் போஸ்ட்

செக் போஸ்ட்

செக் போஸ்ட்

செக் போஸ்ட்

ADDED : ஜூன் 10, 2025 02:14 AM


Google News
பல இடங்களில் பட்டுப்போன மரங்கள் உள்ளன. இதன் பேரில் வனத்துறை கவனிக்க தவறுகிறது. மரக்கன்றுகள் நடும் நிறுவனங்கள், இத்தகைய மரங்களை அகற்ற கவனம் செலுத்தலாமே.

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, மரம் நடும் சம்பிரதாயத்தை பல அமைப்புகள் ஆர்வம் காட்டின. ஒரு மரம் விழுந்து, ஒரு பெண் பலியான சம்பவம் ஏற்பட்டது. இறந்தவர் குடும்பத்துக்கு, அரசு நிதி பெற்று தருவதாக அறிவிச்சவங்க சீக்கிரம்

கிடைக்க செய்வாங்களா அல்லது மைன்ஸ் தொழிலாளிக்கு இறுதி செட்டில்மென்ட் போல இழுபறி தொடருமா.

ஆர்.சி., வெற்றி கொண்டாட்டத்தில் கிராமத்து 'கோல்டன்' பெண்ணும் சிக்கி உயிர் விட்டாரு. மாவட்ட கலெக்டர் முதல் சர்வ கட்சியினரும் நேரில் வந்து துக்கத்தை காட்டினாங்க. ஆனால் கைக்கார அசெம்பிளிக்காரரை காணல. அவருக்கு என்ன முக்கிய வேலையோ.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, கேபிடல் சிட்டியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத 4 பேரை கைது செஞ்சாங்க.

ஆர்.சி., பார்ட்னர்களான சில புள்ளிகளை கைது செய்ய, வீடு வீடாக காக்கிகள் தேடுறாங்க. இதில் கோல்டு சிட்டி பொறியியல், சட்ட கல்லூரியின் கேப்டன் வீடு கேபிடல் சிட்டியில் உள்ளது. அவரையும் தேடி வர்றாங்க. ஆனால் அவர் 'எஸ்கேப்' ஆகிட்டதா சொல்றாங்க. கிடைத்தால் அவரிடமும் விசாரிக்க போவதாக சொல்றாங்க.

பல ஆயிரம் வருமானம் கொட்டும் தொழிலாச்சே, இதில் உள்ளவங்க பேர்ல 'கன'மான விசாரணை நடத்தாம காக்கிகள் துாங்க மாட்டாங்க.

தங்கமான நகரில் வருமானம் பெருகுகிற பல கோவில்கள் இருக்கு. அந்த கோவில்கள் தனியார் வசம் தான் இருக்குது. இந்த பட்டியலில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் பற்றி அரசின் கவனத்துக்கு போயிருக்கு.

இதில் ரா.பேட்டை கீதா சாலை சிவாலய கோவில் சிக்கிடுச்சு. அதன் கிழக்கே 100 மீட்டர் துாரத்தில் உள்ள இலங்கையை கையில் துாக்கி வந்ததா சொல்லப்படுகிற சுவாமி கோவிலும்,

தெற்கில் 500 மீட்டர் துாரத்தில் ஞானப் பழம் பெற்ற முதல் கடவுளின் பழமையான கோவிலும் விரைவில் அரசுடமையாக்க போறாங்களாம்.

ஏற்கனவே, நீதிமன்ற வழக்கில் உள்ள 'கோடி' சுவாமி கோவிலும் அரசு பார்வையில் இருக்குது.

ஓல்டு மா.குப்பம் பகுதியில் பழமை வாய்ந்த தமிழ் மன்னர் கோவிலும் தனியார் வசம் இருப்பதை பறிக்க புகார்கள் அரசு கதவை தட்டியிருக்கு.

கோல்டு சிட்டிக்கு நிரந்தரமா குடிக்க தண்ணீருக்கு 25 ஆண்டுகளாக வழியே இல்லை. கர்நாடக மாநில மழைநீர், கி.கிரி மாவட்டத்துக்கு பாய விடாமல் தடுத்து, புதுசா அணையை கட்டினாங்க. அங்கு சேமிக்கிற நீர், கோல்டு சிட்டிக்கும் கிடைக்குமென சொன்னாங்க. அன்று சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு.

ஏற்கனவே பே.மங்களா தண்ணீரும் கிடைக்காம போச்சு. போர்வெல் நீர் தான் உயிர் நாடியா இருக்குது. அதை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே பயன் படுத்துறதால பல வியாதி, தானாக வந்து சேருவதால் மருத்துவமனை தான் நிறையுது.

கோரமங்களா - செல்லகட்டா வேலி நீருக்கு உருளைகள் புதைச்சாங்க; ஒரு சொட்டு நீரும் ஏரிக்கு வந்த பாடில்லை. தண்ணீருக்கு எதிரியா கோல்டு சிட்டி. பேருக்கு தான் வற்றாத ஜீவநதி காவிரி, கிருஷ்ணா, பாலாறு பாயுதுன்னு தான் பெருமை. ஆனால் தங்க நகருக்கு வராமல் முடக்கலாமா.

*தண்ணீருக்கு பஞ்சமே!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us