/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஜூலை 1 முதல் வருகை பதிவேடு முறையில் மாற்றம் ஜூலை 1 முதல் வருகை பதிவேடு முறையில் மாற்றம்
ஜூலை 1 முதல் வருகை பதிவேடு முறையில் மாற்றம்
ஜூலை 1 முதல் வருகை பதிவேடு முறையில் மாற்றம்
ஜூலை 1 முதல் வருகை பதிவேடு முறையில் மாற்றம்
ADDED : ஜூன் 15, 2025 11:25 PM

பெங்களூரு,: ஜூலை 1ம் தேதி முதல் கர்நாடகத்தில் உள்ள அனைத்து சுகாதார நிறுவனங்கள் உட்பட சுகாதார, குடும்ப நலத்துறை முழுதும் மொபைல் போன் அடிப்படையிலான வருகை பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், 'எக்ஸ்' பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது:
மாநிலத்தில் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் வெளிப்படையான முறையை கொண்டு வரவே, மருத்துவர்கள் உட்பட ஊழியர்களுக்கு மொபைல் போன் வருகை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டம் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. மருத்துவமனைகளில் டாக்டர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற பொது மக்களின் புகார்கள், இனி குறையும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.