/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சி.இ.டி., நுழைவு தேர்வு இன்று முடிவு வெளியீடு சி.இ.டி., நுழைவு தேர்வு இன்று முடிவு வெளியீடு
சி.இ.டி., நுழைவு தேர்வு இன்று முடிவு வெளியீடு
சி.இ.டி., நுழைவு தேர்வு இன்று முடிவு வெளியீடு
சி.இ.டி., நுழைவு தேர்வு இன்று முடிவு வெளியீடு
ADDED : மே 24, 2025 04:49 AM
பெங்களூரு: இன்ஜினியரிங் உட்பட, பல்வேறு தொழில் சார்ந்த கோர்ஸ்களின் அட்மிஷனுக்காக நடந்த சி.இ.டி., தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.
இது குறித்து, கே.இ.ஏ., எனும் கர்நாடக தேர்வு ஆணையம், நேற்று வெளியிட்ட அறிக்கை:
இன்ஜினியரிங் உட்பட, பல்வேறு தொழில் சார்ந்த கோர்ஸ்களின் அட்மிஷனுக்காக, கே.இ.ஏ., சார்பில் நடப்பாண்டு ஏப்ரல் 16 மற்றும் 17ம் தேதிகளில், சி.இ.டி., தேர்வு நடத்தியது.
இதில் 3.11 லட்சம் பேர் தேர்வுக்கு பெயரை பதிவு செய்து கொண்டனர். 94.20 சதவீதம் மாணவர்கள் தேர்வுக்கு ஆஜராகினர்.
இரண்டாம் ஆண்டு பி.யு.சி., - 2 தேர்வு முடிந்த பின், சி.இ.டி., தேர்வு முடிவை வெளியிட, கே.இ.ஏ., திட்டமிட்டிருந்தது.
பி.யு.சி., - 2 தேர்வு முடிவு வெளியானதால், நாளை (இன்று) சி.இ.டி., தேர்வு வெளியிடப்படுகிறது. மதியம் 2:00 மணிக்கு, உயர் கல்வித்துறை அமைச்சர் சுதாகர், தேர்வு முடிவை வெளியிடுவார். மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவர், மாணவியர் பட்டியலை விவரிப்பார்.
அதன்பின் கே.இ.ஏ., வின் அதிகாரப்பூர்வமான இணைய தளங்களில் தேர்வு முடிவை பார்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.