நாளை முதல் 5 நாட்கள் காவிரி ஆரத்தி
நாளை முதல் 5 நாட்கள் காவிரி ஆரத்தி
நாளை முதல் 5 நாட்கள் காவிரி ஆரத்தி
ADDED : செப் 24, 2025 11:13 PM

பெங்களூரு: “தசரா திருவிழாவை முன்னிட்டு, நாளை முதல் ஐந்து நாட்கள் கே.ஆர்.எஸ்., அருகே காவிரி ஆரத்தி நிகழ்ச்சி நடக்கும்,” என, மாநில விவசாயத்துறை அமைச்சர் செலுவராயசாமி தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நாளை முதல், ஐந்து நாட்கள் வரை மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கே.ஆர்.எஸ்., அணை பகுதியில், காவிரி ஆரத்தி நடக்கும். துணை முதல்வர் சிவகுமார், காவிரி ஆற்றுக்கு மலர் துாவி, சாஸ்திர முறைப்படி காவிரி ஆரத்தியை துவக்கி வைப்பார்.
காவிரி ஆரத்தியில், ஆதி சுஞ்சனகிரி மடத்தின் நிர்மலானந்தநாத சுவாமிகள், சுத்துார் மடத்தின் சிவராத்ரி தேஷிகேந்திர சுவாமிகள், சித்தகங்கா மடத்தின் சித்தலிங்க சுவாமிகள், விஸ்வ ஒக்கலிக மஹா சமஸ்தான மடத்தின் நிஷ்சலானந்த சுவாமிகள், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ் பன்டிசித்தேகவுடா, நரேந்திர சாமி உட்பட, பலர் பங்கேற்பர்.
காவிரி ஆரத்தி நிகழ்ச்சியை 13 புரோகிதர்கள் நடத்திக் கொடுப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.