/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு இன்று... துவக்கம்! பெங்களூரில் மட்டும் 4 நாட்களுக்கு பின் ஆரம்பம் தசரா கொண்டாட்டம் பாதிக்கும் என ஆசிரியர்கள் விரக்தி கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு இன்று... துவக்கம்! பெங்களூரில் மட்டும் 4 நாட்களுக்கு பின் ஆரம்பம் தசரா கொண்டாட்டம் பாதிக்கும் என ஆசிரியர்கள் விரக்தி
கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு இன்று... துவக்கம்! பெங்களூரில் மட்டும் 4 நாட்களுக்கு பின் ஆரம்பம் தசரா கொண்டாட்டம் பாதிக்கும் என ஆசிரியர்கள் விரக்தி
கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு இன்று... துவக்கம்! பெங்களூரில் மட்டும் 4 நாட்களுக்கு பின் ஆரம்பம் தசரா கொண்டாட்டம் பாதிக்கும் என ஆசிரியர்கள் விரக்தி
கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு இன்று... துவக்கம்! பெங்களூரில் மட்டும் 4 நாட்களுக்கு பின் ஆரம்பம் தசரா கொண்டாட்டம் பாதிக்கும் என ஆசிரியர்கள் விரக்தி
ADDED : செப் 22, 2025 03:57 AM

கர்நாடகாவில் கடந்த 2013 முதல் 2018 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில், 2015ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் காந்தராஜு தலைமையில், ஆணையம் அமைக்கப்பட்டது.
2018ல் ஆட்சி மாற்றம் நடந்த பின், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. பா.ஜ., ஆட்சியின் கடைசி கட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக இருந்த ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையில், அறிக்கையில் ஏதாவது குளறுபடி இருந்தால் அதனை சரிசெய்ய ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம், தற்போதைய காங்கிரஸ் ஆட்சியின் முதல்வர் சித்தராமையாவிடம் அறிக்கை தாக்கல் செய்தது. மாநிலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட லிங்காயத், ஒக்கலிகர் சமூகத்தினரை விட, பிற்படுத்தப்பட்டோர் சமூக மக்கள் அதிகளவில் உள்ளதாக, அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
இதனால், அறிக்கையை அமல்படுத்த லிங்காயத், ஒக்கலிகர் சமூகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சரியான கணக்கெடுப்பு நடக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர். இதையடுத்து, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உத்தரவுப்படி, புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அரசு அறிவித்தது.
இறுதி பட்டியல் இதன்படி, இன்று துவங்கும் கணக்கெடுப்பை, 15 நாட்களில் முடிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கிடையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வெளியிட்ட ஜாதிகள் பட்டியலில் கிறிஸ்துவர் பிரிவின் கீழ் புதிதாக 47 துணை ஜாதிகளை சேர்த்தது சர்ச்சையை கிளப்பியது.
கவர்னர் வரை விஷயம் சென்றதால், அழுத்தத்திற்கு அடிபணிந்து துணை ஜாதிகள் பெயர் கைவிடப்படும் என்று அரசு அறிவித்தது.
இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் மதுசூதன் நாயக், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
பிற்படுத்தப்பட்டோர் ஆணைய முன்னாள் தலைவர் காந்தராஜு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ள ஜாதிகளையும், எங்கள் கவனத்திற்கு வந்த ஜாதிகளையும் சேர்த்து மொத்தம் 1,561 ஜாதிகளின் இறுதி பட்டியலை உருவாக்கினோம்.
இந்த பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட ஜாதிகளுக்கு, சில அரசியல் தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். கிறிஸ்துவ பிரிவில் 47 புதிய துணை ஜாதிகளை சேர்க்கவில்லை. ஏற்கனவே 38 துணை ஜாதிகள் இருந்தன. தற்போது நாங்கள் 33 துணை ஜாதிகளை நீக்கி உள்ளோம். தற்போதைய பட்டியலில் 1,528 ஜாதிகள் உள்ளன.
ஆதார் எண் நாளை (இன்று) துவங்கும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம். கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு ஒவ்வொரு நாளும் 140 முதல் 150 வீடுகளில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். ஆசிரியர்கள், பிற துறைகளின் ஊழியர்கள் என 2 லட்சம் பேர் கணக்கெடுப்பு நடத்துவர்.
கணக்கெடுப்பின் போது, பொதுமக்கள் ஆதார் எண்ணை வழங்க வேண்டும். ஆதார் எண்ணை சரிபார்த்த பிறகு, 60 கேள்விகள் கேட்கப்பட்டு தகவல் சேகரிக்கப்படும். கணக்கெடுப்பு முடிந்த பின், மக்கள் கூறும் ஜாதிகளை அடிப்படையாக வைத்து, இறுதி பட்டியல் தயார் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெயர் நீக்கம் பிற்படுத்தப்பட்டோர் நல துறை கமிஷனர் தயானந்தா கூறியதாவது:
கர்நாடக மக்களின் சமூகம், கல்வி, பொருளாதாரம் பற்றி அறிய இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கணக்கெடுப்பின் போது கிறிஸ்துவர்கள் தங்களது துணை ஜாதிகள் பெயர்களை குறிப்பிட்டாலும், அவர்களை கிறிஸ்துவர் என்றே அடையாளம் காண்போம். முந்தைய கணக்கெடுப்பின் போது ஒக்கலிகா கிறிஸ்துவர், குருபா கிறிஸ்துவர், பிராமண கிறிஸ்துவர் என்று மக்கள் தான் குறிப்பிட்டு உள்ளனர். இப்போது குழப்பம் ஏற்பட்டு உள்ளதால், 33 துணை ஜாதிகள் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. வீரசைவ, லிங்காயத் என்று மதத்தை தனியாக எழுதினாலும், அதிகாரபூர்வ மதம் எது என்பதை மட்டும் கருத்தில் கொள்வோம்.
வீட்டில் ஸ்டிக்கர் பெங்களூரில் இன்று ஜாதிவாரி கணக்கெடுப்பு துவங்காது. மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு பின் துவங்கும். மாநகராட்சி தற்போது ஜி.பி.ஏ.,வாக மாறி இருப்பதால், கணக்கெடுப்பில் சில நிர்வாக பிரச்னை உள்ளது. பெங்களூரில் கணக்கெடுப்பு நடத்த ஆசிரியர்களை அதிகம் பயன்படுத்த மாட்டோம்.
மற்ற துறைகளின் ஊழியர்கள் பயன்படுத்தப்படுவர். கணக்கெடுப்பு நடக்கும் போது மக்கள் வீட்டில் இல்லாவிட்டால் ஸ்டிக்கர் ஒட்டப்படும். அதில் இருக்கும் மொபைல் நம்பருக்கு அழைத்து, தங்கள் விபரங்களை கூறலாம். தெலுங்கானா பாணியில் நாம் கணக்கெடுப்பு நடத்தவில்லை. நமது முந்தைய கணக்கெடுப்பின் தகவல்களை பெற்றுதான், அவர்கள் கணக்கெடுப்பு நடத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
60 கேள்விகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியில் 1.75 லட்சம் ஆசிரியர் - ஆசிரியைகள் பங்கேற்கின்றனர். இவர்களில் ஆசிரியைகள் தான் அதிகமாக உள்ளனர். தசரா பண்டிகை இன்று துவங்க உள்ள நிலையில், கணக்கெடுப்பில் தங்களை ஈடுபடுத்துவது, வீட்டில் தசரா கொண்டாட்டத்தை பாதிக்கும் என்று ஆசிரியைகள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
எஸ்.சி., உள் இடஒதுக்கீடு தொடர்பாக, ஓய்வு நீதிபதி நாகமோகன் தாஸ் ஆணையம் கணக்கெடுப்பு நடத்தியது. 15 நாட்களில் இந்த பணி முடியும் என்று கூறப்பட்ட நிலையில், மூன்று மாதங்களுக்கு மேல் ஆனது. ஜாதிவாரி கணக்கெடுப்பை 15 நாட்களில் முடிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஆனால், குறைந்த நாட்களில் கண்டிப்பாக, கணக்கெடுப்பு நடத்த முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் 60 கேள்விகள் வரை கேட்க வேண்டி உள்ளது. இதனால் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் கணக்கெடுப்பு நடத்துவது சாத்தியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.