/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'கோட்பா' சட்டத்தை மீறிய 11,507 பேர் மீது வழக்கு 'கோட்பா' சட்டத்தை மீறிய 11,507 பேர் மீது வழக்கு
'கோட்பா' சட்டத்தை மீறிய 11,507 பேர் மீது வழக்கு
'கோட்பா' சட்டத்தை மீறிய 11,507 பேர் மீது வழக்கு
'கோட்பா' சட்டத்தை மீறிய 11,507 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 04, 2025 01:28 AM

பெங்களூரு : பெங்களூரில், கோட்பா சட்டத்தை மீறி பொது இடங்களில் புகை பிடித்த, குட்கா பயன்படுத்திய, 11,507 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் 21.19 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக, போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறினார்.
இதுகுறித்து நேற்று அவர் அளித்த பேட்டி:
உலக புகையிலை தினத்தின் ஒரு பகுதியாக, கடந்த மாதம் 31 ம் தேதியில் இருந்து இம்மாதம் 2 ம் தேதி வரை, பெங்களூரு நகரில் மதுக்கடைகள், பார்கள், தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள் முன்பு, பொது இடங்களில் போலீசார் ரோந்து சென்றனர்.
மேற்கண்ட பகுதிகளில் நின்று சிகரெட் பிடித்தவர்கள், குட்காவை மென்று துப்பியவர்கள் என 11,507 பேர் மீது, கோட்பா எனும் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களிடம் இருந்து 21.19 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
பெங்களூரில் உணவகங்கள், ஹோட்டல்கள் ஹுக்கா பார்களை அமைக்க முடியாது. கடைகளில் சிகரெட், புகையிலை பொருட்களை விற்பனை செய்ய, மாநகராட்சி அனுமதி பெறுவது அவசியம். புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. முப்பதுக்கும் மேற்பட்ட இருக்கைகள் உள்ள ஹோட்டல், பார் அன்ட் ரெஸ்டாரண்டில் புகை பிடிப்பதற்கு தனியாக ஒரு பகுதி அமைப்பது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.