/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பசுவின் மடியை வெட்டிய மர்ம நபர்கள் மீது வழக்கு பசுவின் மடியை வெட்டிய மர்ம நபர்கள் மீது வழக்கு
பசுவின் மடியை வெட்டிய மர்ம நபர்கள் மீது வழக்கு
பசுவின் மடியை வெட்டிய மர்ம நபர்கள் மீது வழக்கு
பசுவின் மடியை வெட்டிய மர்ம நபர்கள் மீது வழக்கு
ADDED : ஜூன் 29, 2025 11:05 PM

ஷிவமொக்கா: பசுவின் மடியை வெட்டிய மர்ம நபர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது. அதையும் மீறி, சிலர் இறைச்சிக்காக பசுக்களை சட்ட விரோதமாக கடத்தி செல்வது தொடர்கிறது.
அதுமட்டுமின்றி, பசுவின் மடியையும் வெட்டும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகரின் தோட்டதகொப்பாவில், நவீன் என்பவர், தனக்கு சொந்தமான பசுக்களை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். நேற்று அவரை தொடர்பு கொண்ட கிராம மக்கள், பசுவின் மடியில் இருந்து ரத்தம் வருகிறது என்றனர்.
அதிர்ச்சி அடைந்த அவர், அப்பகுதிக்கு சென்றார். கன்றை ஈன்ற 9 வயது பசுவின் மடியை மர்ம நபர்கள் வெட்டியது தெரியவந்தது.
கிராம மக்கள் உதவியுடன், பசுவை, தனது தொழுவத்தில் வைத்து, கால்நடை மருத்துவருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த அவர், பசுவின் மடியில் தையல் போட்டார்.
குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, ஹொசநகர் போலீசில், நவீன் புகார் செய்து உள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.