/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அண்ணியை கடித்த மைத்துனர் மீது வழக்கு அண்ணியை கடித்த மைத்துனர் மீது வழக்கு
அண்ணியை கடித்த மைத்துனர் மீது வழக்கு
அண்ணியை கடித்த மைத்துனர் மீது வழக்கு
அண்ணியை கடித்த மைத்துனர் மீது வழக்கு
ADDED : மார் 25, 2025 01:04 AM
தார்வாட்: தன் ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை பல இடங்களில் கடித்து காயப்படுத்திய, மைத்துனர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தார்வாட் மாவட்டம், குந்த்கோலின் ஹொசகட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பசப்பா, ரமேஷ் சகோதரர்கள். இருவருக்கும் திருமணமாகி, ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே, அண்ணன் மனைவி சவிதாவுக்கு ரமேஷ் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். கணவரின் சகோதரர் என்பதால் அவர் அமைதியாக இருந்து யாரிடமும் கூறவில்லை.
நாளுக்கு நாள் அவரின் தொல்லை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, சவிதாவிடம் தன் விருப்பத்தை ரமேஷ் கூறியுள்ளார். இதற்கு சவிதா மறுத்தார்.
கோபமடைந்த ரமேஷ், சவிதாவின் முகம், மார்பு, கன்னம் என பல இடங்களில் கடித்து காயப்படுத்தி, பைப்பால் தாக்கியுள்ளார். கூச்சலிட்டபடி சவிதா வெளியே ஓடி வந்தார்.
அவர் அலறலை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். ரத்த காயத்துடன் காணப்பட்ட சவிதாவை, ஹூப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதற்குள் ரமேஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
சவிதாவின் உறவினர்கள் குந்த்கோல் போலீசில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், ரமேசை தேடி வருகின்றனர்.