/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'ஷூ' காலால் பெண் போலீசை எட்டி உதைத்த ஏட்டு மீது வழக்கு 'ஷூ' காலால் பெண் போலீசை எட்டி உதைத்த ஏட்டு மீது வழக்கு
'ஷூ' காலால் பெண் போலீசை எட்டி உதைத்த ஏட்டு மீது வழக்கு
'ஷூ' காலால் பெண் போலீசை எட்டி உதைத்த ஏட்டு மீது வழக்கு
'ஷூ' காலால் பெண் போலீசை எட்டி உதைத்த ஏட்டு மீது வழக்கு
ADDED : ஜூன் 12, 2025 11:06 PM
உப்பார்பேட்: போலீஸ் நிலையத்தில் ஏற்பட்ட தகராறில், பெண் போலீசை 'ஷூ' காலால் எட்டி உதைத்த ஏட்டு மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
பெங்களூரு, உப்பார்பேட் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருபவர் ரேணுகா, 35. கடந்த 10ம் தேதி இரவு பணியில் இருந்தார். அப்போது பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்த இரண்டு சிறுமியரை, பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் உப்பார்பேட் ஏ.எஸ்.ஐ., திம்மே கவுடா மீட்டார்.
போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து ரேணுகா பொறுப்பில் சிறுமியரை விட்டுச் சென்றார். கடந்த 11ம் தேதி அதிகாலை 2:30 மணிக்கு, போலீஸ் நிலையத்திற்கு வந்த ஏட்டு கோவிந்தராஜ், மொபைல் போனில் யாரிடமோ பேசிக் கொண்டு இருந்தார். அப்போது பெண்களை பற்றி அவதுாறாக பேசி உள்ளார். இதைக் கேட்ட இரண்டு சிறுமியரும், ரேணுகாவிடம் சென்று கூறினர்.
இதையடுத்து, 'பெண்களை பற்றி ஏன் மோசமாக பேசுகிறீர்கள்?' என்று கோவிந்தராஜிடம், ரேணுகா கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜ், ரேணுகாவை தாக்கியதுடன் 'ஷூ' காலால் எட்டி உதைத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் திம்மே கவுடா, பசவப்பா, மகேஷ் ஆகியோர் கோவிந்தராஜை சமாதானம் செய்தனர்.
ஆனாலும் ரேணுகாவை, கோவிந்தராஜ் திட்டி உள்ளார். தன் மீது நடந்த தாக்குதல் குறித்து ரேணுகா அளித்த புகாரில், உப்பார்பேட் போலீஸ் நிலையத்தில் கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவாகி உள்ளது.