/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குப்பை கொட்டுவோரை கண்டறிய கேமராக்கள் குப்பை கொட்டுவோரை கண்டறிய கேமராக்கள்
குப்பை கொட்டுவோரை கண்டறிய கேமராக்கள்
குப்பை கொட்டுவோரை கண்டறிய கேமராக்கள்
குப்பை கொட்டுவோரை கண்டறிய கேமராக்கள்
ADDED : ஜூன் 21, 2025 11:16 PM

கே.ஆர்., மார்க்கெட்: 'பெங்களூரு கே.ஆர்., மார்க்கெட் பகுதியில் குப்பை கொட்டுவோரை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்' என, மேற்கு மண்டல கமிஷனர் சுரால்கர் விகாஸ் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மேற்கு மண்டல கமிஷனர் சுரால்கர் விகாஸ் கிஷோர் மற்றும் அதிகாரிகள் நேற்று கே.ஆர்., மார்க்கெட் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதுகுறித்து மண்டல கமிஷனர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கே.ஆர்., மார்க்கெட்டில் தினமும் 70 டன் கழிவுகள் உருவாகின்றன. மூன்று ஷிப்ட் அடிப்படையில் அகற்றப்படுகின்றன. இருப்பினும், சில வியாபாரிகள், கழிவுகளை கடைகள் முன்பும், சாலையோரங்களிலும் வீசுகின்றனர். இதை கண்காணிக்க கேமராக்கள் நிறுவப்பட உள்ளன.
இதன் மூலம், குப்பை கொட்டுவோர் அடையாளம் காணப்பட்டு, தண்டிக்கப்படுவர். துாய்மை பணிகளை கண்காணிக்க ஒரு மேற்பார்வை மார்ஷல், ஏழு பீல்ட் மார்ஷல்கள் நியமிக்கப்படுவர்.
அனைத்து வியாபாரிகளும் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்திலே வியாபாரம் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. சந்தையில் நான்கு முக்கிய இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்படும். வியாபாரிகளுக்கு தனித்தனியாக குப்பை தொட்டிகள் வழங்கப்படும். மார்க்கெட் பகுதியில் வாகனம் நிறுத்துமிடத்திற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.