ADDED : மே 12, 2025 06:52 AM

சிக்கபல்லாபூர்: உயர் கல்வித்துறை அமைச்சர் சுதாகர், நந்தி மலைக்கு சென்று சுற்றுலா பயணியரை சந்தித்து, அடிப்படை வசதிகள் குறித்து விசாரித்தார்.
சிக்கபல்லாபூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சுதாகர், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நந்தி மலைக்கு வருகை தந்தார்.
மலை அடிவாரத்தில் இருந்த சுற்றுலா பயணியருடன் பேசி, நுழைவு கட்டணம், ரோப்வே, இ பேமென்ட் குறித்து, தகவல் கேட்டறிந்தார். கழிப்பறை துாய்மையாக உள்ளதா, மலையில் என்னென்ன வசதிகள் செய்வது என, விசாரித்தார்.
கட்டணம் எந்த முறையில் வசூலிக்கப்படுகிறது என்பதை, நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் மலையேறி சென்றார். சுற்றி பார்த்து விட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நந்தி மலையில் ரோப் வே திட்ட பணிகள், எந்த கட்டத்தில் உள்ளது, ரோப் வே அமைக்கும் டெண்டர் பெற்றுள்ள நிறுவனம், என்னென்ன உதவிகள் எதிர்பார்க்கிறது என்பதையும் கேட்டறிந்தார்.
வரும் நாட்களில், நந்தி மலையில் அமைச்சரவை கூட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.