/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கட்டட வரைபட திட்டம்: இ --- பட்டா கட்டாயம் கட்டட வரைபட திட்டம்: இ --- பட்டா கட்டாயம்
கட்டட வரைபட திட்டம்: இ --- பட்டா கட்டாயம்
கட்டட வரைபட திட்டம்: இ --- பட்டா கட்டாயம்
கட்டட வரைபட திட்டம்: இ --- பட்டா கட்டாயம்
ADDED : ஜூன் 10, 2025 02:31 AM
பெங்களூரு: 'கட்டடம் கட்டுவதற்கான வரைபட திட்ட ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கும்போது, ஜூலை 1ம் தேதி முதல் இ - பட்டாவை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்' என, கிரேட்டர் பெங்களூரு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
தலைமை கமிஷனர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்போர், கட்டடம் கட்டுவதற்கான வரை பட திட்ட ஒப்புதலுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, இ - பட்டாவை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறை ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
கட்டட வரைபட ஒப்புதலுக்காக பயன்படுத்தப்படும் ஆன்லைன் மென்பொருட்கள், வரிவிதிப்பு பிரிவின் மென்பொருட்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், வரிவிதிப்பு பிரிவிற்கு தனியாக ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய தேவையில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.