Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காதலியை கழுத்தறுத்து கொன்ற காதலன் கைது

காதலியை கழுத்தறுத்து கொன்ற காதலன் கைது

காதலியை கழுத்தறுத்து கொன்ற காதலன் கைது

காதலியை கழுத்தறுத்து கொன்ற காதலன் கைது

ADDED : ஜூன் 19, 2025 03:36 AM


Google News
Latest Tamil News
திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், பெங்களூரு இளம்பெண்ணை கோவாவில் வைத்து கொலை செய்த, காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவா மாநிலத்தின் தர்பந்தோரா வனப்பகுதியில் கடந்த 16ம் தேதி, 22 வயது இளம்பெண் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

அவரது கழுத்தை அறுத்து மர்ம நபர்கள் கொன்றது தெரிந்தது. சடலம் அருகில், ஹூப்பள்ளியில் இருந்து கோவாவுக்கு வந்ததற்கான கர்நாடக அரசு பஸ் டிக்கெட் இருந்தது.

இதனால் பஸ் நிலையத்திற்கு சென்று கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில், இளம்பெண், பெங்களூரின் லிங்கராஜபுரத்தை சேர்ந்த ரோஷினி மோசஸ், 22, என்பதும், தனியார் பள்ளியில் ஊழியராக வேலை செய்ததும் தெரிந்தது. ரோஷினியை அவரது காதலன் சஞ்சய் கெவின், 25, கொன்றதும் தெரிந்தது.

நேற்று முன்தினம் ஹூப்பள்ளியில் அவர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு கோவா அழைத்துச் செல்லப்பட்டார்.

ரோஷினியும், சஞ்சயும் கோவாவில் வரும் 22ம் தேதி திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

இதற்காக வீட்டில் இருந்து வெளியேறி இருவரும் கோவா சென்றதும், அங்கு ஏற்பட்ட தகராறில் ரோஷினி கழுத்தை கத்தியால் அறுத்து சஞ்சய் கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது

- நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us