/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரூ.100 கோடியில் காவிரி ஆரத்தி பா.ஜ., - எம்.பி., யதுவீர் எதிர்ப்பு ரூ.100 கோடியில் காவிரி ஆரத்தி பா.ஜ., - எம்.பி., யதுவீர் எதிர்ப்பு
ரூ.100 கோடியில் காவிரி ஆரத்தி பா.ஜ., - எம்.பி., யதுவீர் எதிர்ப்பு
ரூ.100 கோடியில் காவிரி ஆரத்தி பா.ஜ., - எம்.பி., யதுவீர் எதிர்ப்பு
ரூ.100 கோடியில் காவிரி ஆரத்தி பா.ஜ., - எம்.பி., யதுவீர் எதிர்ப்பு
ADDED : ஜூன் 12, 2025 11:03 PM

மாண்டியா: “கே.ஆர்.எஸ்., அணைப்பகுதியில், பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதை நான் எதிர்க்கிறேன். மாண்டியாவின் வேறு இடத்தில் திட்டத்தை செயல்படுத்தட்டும்,” என பா.ஜ., - எம்.பி., யதுவீர் தெரிவித்தார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நான் எதிரி இல்லை. மேம்பாடும் தேவை. ஆனால், கே.ஆர்.எஸ்., அணை பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா தேவையில்லை. மாண்டியா மாவட்டத்தில், ஏராளமான இடங்கள் உள்ளன. கே.ஆர்.எஸ்., தவிர வேறு தகுதியான இடத்தில், விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்து, பொழுதுபோக்கு பூங்கா அமைப்பது நல்லது.
கே.ஆர்.எஸ்., அணை கட்டி 100 ஆண்டுகள் ஆகின்றன. எனவே அணையின் பாதுகாப்புக்கு, நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அணையின் சுற்றுச்சூழல் இயற்கை அழகுடன் சிறப்பாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் கே.ஆர்.எஸ்.,க்கு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்தால் போதும்.
ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு, நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், 100 கோடி ரூபாய் செலவிட்டு, காவிரி ஆரத்தி நடத்துவது சரியல்ல. பொழுதுபோக்கு பூங்கா அமைப்பது உட்பட, மற்ற மேம்பாட்டு பணிகளுக்கு, 100 கோடி ரூபாய் செலவிடுகின்றனர் என, நான் நினைத்திருந்தேன்.
காங்கிரஸ் அரசு காவிரி ஆரத்திக்கு மட்டும், 100 கோடி ரூபாய் செலவிடுகிறது. 100 கோடி ரூபாய் செலவில், காவிரி ஆரத்தி நடத்துவதை, நாங்கள் எங்கும் பார்த்தது இல்லை. வேண்டுமானால் பா.ஜ., இலவசமாகவே காவிரி ஆரத்தி நடத்தி தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.