Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'எங்களை பார்த்து பா.ஜ.,வுக்கு அச்சம்'

'எங்களை பார்த்து பா.ஜ.,வுக்கு அச்சம்'

'எங்களை பார்த்து பா.ஜ.,வுக்கு அச்சம்'


ADDED : ஜூன் 17, 2025 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2025 11:00 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரிகள் அதிகம் இருப்பர். எங்களை பார்த்து பா.ஜ.,வினருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்தில், முதல்வரையும், என்னையும் ராஜினாமா செய்ய கோரி, எதிர்க்கட்சியினர் வற்புறுத்துகின்றனர்.

மஹாராஷ்டிராவில் பல ரயில் நிலையங்களிலும்; உத்தர பிரேதசத்தில் உள்ள கோவிலில் நுாற்றுக்கணக்கான பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதற்கு யார் பெறுப்பு? இரண்டு நாட்களுக்கு முன்பு ஆமதாபாத் சென்றிருந்தேன். மத்திய அரசை குறிவைத்து பேசினேனா?

இறந்தவர்கள் உடல்கள் மீது அரசியல் செய்வதையே பல ஆண்டுகளாக வாடிக்கையாக வைத்துஉள்ளனர். 'பந்த்'தின் போதும், கங்காதர் கொலை வழக்கிலும், அவர்கள் இதையே தான் செய்தனர்.

கூட்ட நெரிசல் வழக்கில் தொடர்பானவர்களை அரசு ஏற்கனவே தண்டித்துள்ளது. இதை விசாரிக்க, தனி நபர் கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுதும் இதுபோன்று நுாற்றுக்கணக்கான சம்பவங்கள் நடந்துள்ளன.

ஆனால், இறந்தவர்கள் விஷயத்தில் காங்கிரஸ் ஒரு போதும் அரசியல் செய்ததில்லை. அவர்களின் அரசியல் அஸ்திவாரம் ஆட்டம் காண துவங்கி உள்ளது. நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்ட, இவ்வாறு பேசுகின்றனர்.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரிகள் அதிகம் இருப்பர். எங்களை பார்த்து அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் (ஊடகத்தினர்) எங்களுடன் இருந்தால், 2028லும் விதான் சவுதாவில் நாங்கள் பதவி பிரமாணம் எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us