Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி; பி.சி.சி.ஐ., மீது பசவராஜ் பொம்மை அதிருப்தி

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி; பி.சி.சி.ஐ., மீது பசவராஜ் பொம்மை அதிருப்தி

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி; பி.சி.சி.ஐ., மீது பசவராஜ் பொம்மை அதிருப்தி

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி; பி.சி.சி.ஐ., மீது பசவராஜ் பொம்மை அதிருப்தி

ADDED : செப் 15, 2025 07:56 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : ''இந்தியா - பாகிஸ்தான் இடையில் கிரிக்கெட் போட்டி நடத்துவதில், நமது நாட்டு மக்களின் உணர்வுக்கு ஏற்ப, பி.சி.சி.ஐ., முடிவு எடுக்கவில்லை,'' என்று, ஹாவேரி பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தர்மஸ்தலா வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வரும் மிக பெரிய பொறுப்பு, எஸ்.ஐ.டி.,யிடம் உள்ளது. இந்த வழக்கில் சதி தீட்டம் தீட்டிய முக்கிய நபர்களை, எஸ்.ஐ.டி., இன்னும் நெருங்கவில்லை. இவர்களை நெருங்க கூடாது என்று எஸ்.ஐ.டி.,க்கு, அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் புதிது, புதிதாக புகார் அளிக் கின்றனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை, அரசிடம் விரைவில் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசியலமைப்பில் ஆறு மதங்கள் மட்டுமே உள்ளன. இன்னும் எத்தனை மதங்களை பட்டியலிட வேண்டும். மதம் மாறிய கிறிஸ்துவர்கள் என்ற காலத்தை அரசு உருவாக்கி உள்ளது. இது அரசியலமைப்பிற்கு வி ரோதமானது. அரசியல் நோக்கம் கொண்டது. மதம் மாறி கொள்வது மக்களின் உரிமை என்று, முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.

யார் அதிகாரம் மாநிலத்தில் மதமாற்ற தடை சட்டம் அமலில் உள்ளது. ஹிந்துவில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு சென்றவர்கள் மீண்டும் ஹிந்து மதத்திற்கு திரும்ப வந்து உள்ளனர். ஜாதி பிரிவின் கீழ் மதம் மாறியவர்களுக்கு காலம் உருவாக்க யார் அதிகாரம் கொடுத்தது.

இதற்கு முன்பு ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை நடத்தி, 200 கோடிக்கு மேல் வீணடித்தனர். தற்போது புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை நடத்தி 420 கோடி ரூபாயை வீணடிக்க போகின்றனர்.

டிசம்பர் மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று, சித்தராமையா கூறி உள்ளார்.

இதன்மூலம் தனது முதல்வர் பதவியை தக்க வைக்க அவர் முயற்சி செய்கிறார்.

தற்போதைய வீரசைவ லிங்காயத் மகாசபை முற்றிலும் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த மகாசபை சட்டம், அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும். குழப்பத்தை உருவாக்க கூடாது. ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையில் கிரிக்கெட் போட்டி நடத்தாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

விளையாட்டு முக்கியம் தான். ஆனால், அதை விட நமக்கு நாடும் முக்கியம். நாட்டு மக்கள் உணர்வுக்கு ஏற்ப பி.சி.சி.ஐ., முடிவு எடுக்கவில்லை. ஹாசன் மொசலே ஒசஹள்ளி கிராமத்தில் விபத்தில் சிக்கி இறந்த 10 பேர் குடும்பத்திற்கும், அரசு அதிக நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us