/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மனைவியை பிரித்ததால் கோபம் மாமியார் கத்தியால் குத்தி கொலை மனைவியை பிரித்ததால் கோபம் மாமியார் கத்தியால் குத்தி கொலை
மனைவியை பிரித்ததால் கோபம் மாமியார் கத்தியால் குத்தி கொலை
மனைவியை பிரித்ததால் கோபம் மாமியார் கத்தியால் குத்தி கொலை
மனைவியை பிரித்ததால் கோபம் மாமியார் கத்தியால் குத்தி கொலை
ADDED : செப் 13, 2025 04:39 AM
ஹாசன்: ஹாசன் நகரின் ராமநாதபுராவில் வசிப்பவர் ஜாஹீர் அகமது, 60. இவரது மனைவி பைரோசா பானு, 55. தம்பதிக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஜாஹீர் அகமது, இரண்டு மகள்கள், மகனுடன் கத்தாரில் வசிக்கிறார். மற்றொரு மகள் சமீனா பானு, 28, தாயுடன் வசிக்கிறார்.
இவரை மைசூரு மாவட்டம், பிரியாபட்டணாவின், பெட்டதபுரா கிராமத்தை சேர்ந்த ரசூல், 32, என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். திருமணமாகி 10 ஆண்டுகளாகியும், தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் தன் மனைவி நடத்தையை சந்தேகித்து, ரசூல் அடித்து சித்ரவதை செய்தார். தினமும் ச ண்டை நடந்தது.
மகளின் கஷ்டத்தை சகிக்க முடியாமல், பைரோசா பானு நேற்று முன் தினம் காலை, மகளை தன் வீட்டுக்கு அழைத்து வந்தார். இது மருமகனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் மாலை மாமியாரின் வீட்டுக்கு வந்தார்.
மாமியார் பைரோசா பானுவுடன் தகராறு செய்து, கத்தியால் குத்தினார். தடுக்க வந்த மனைவி சமீனா பானுவின் கழுத்திலும் குத்தினார். இருவரையும் காப்பாற்ற முயற்சித்த சமீனா பானுவின் அண்ணியின் கைகளில் காயம் ஏற்பட்டது.
பைரோசா பானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகளும், மருமகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். ரசூல் தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து கோனனுார் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள் ளது. கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.