/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விதான் சவுதாவிற்குள் மக்களை அனுமதிக்கவும் விதான் சவுதாவிற்குள் மக்களை அனுமதிக்கவும்
விதான் சவுதாவிற்குள் மக்களை அனுமதிக்கவும்
விதான் சவுதாவிற்குள் மக்களை அனுமதிக்கவும்
விதான் சவுதாவிற்குள் மக்களை அனுமதிக்கவும்
ADDED : ஜூன் 18, 2025 11:19 PM

பெங்களூரு: 'விதான் சவுதாவை பார்வையிட மக்களை இலவசமாக அனுமதிக்க வேண்டும்' என, தொழிலதிபர் மோகன்தாஸ் பை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தன் 'எக்ஸ்' பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு:
பொது மக்களை விடுமுறை நாட்களன்று விதான் சவுதா வளாகத்திற்குள் இலவசமாக நுழைய அனுமதிக்க அரசு முன்வரவேண்டும்.
தங்கள் பெற்றோருடன் குழந்தைகள் வந்து விளையாடி, மகிழ்ச்சியாக இருப்பர். இது நம் அரண்மனை. முன்பு விதான் சவுதாவிற்குள் மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போதெல்லாம், படிகளில் உட்கார்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆனால், தற்போது அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் தயவு செய்து, பொதுமக்கள் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.