Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நந்த கிஷோர் ரூ.22 லட்சம் மோசடி நடிகர் சபரீஷ் ஷெட்டி புகார்

நந்த கிஷோர் ரூ.22 லட்சம் மோசடி நடிகர் சபரீஷ் ஷெட்டி புகார்

நந்த கிஷோர் ரூ.22 லட்சம் மோசடி நடிகர் சபரீஷ் ஷெட்டி புகார்

நந்த கிஷோர் ரூ.22 லட்சம் மோசடி நடிகர் சபரீஷ் ஷெட்டி புகார்

ADDED : ஜூன் 23, 2025 11:13 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: தனக்கு பட வாய்ப்புகள் அளிப்பதாக நம்ப வைத்து, 22 லட்சம் ரூபாய் பெற்று, மோசடி செய்ததாக பிரபல திரைப்பட இயக்குநர் நந்த கிஷோர் மீது, நடிகர் சபரீஷ் ஷெட்டி, திரைப்பட வர்த்தக சபையில் புகார் அளித்துள்ளார்.

கன்னட திரையுலகின் பிரபல இயக்குநர் நந்த கிஷோர். இவர் பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவருக்கு, நடிகர் சபரீஷ் ஷெட்டி அறிமுகமானார். சில படங்களில் நடித்துள்ள இவர், தயாரிப்பாளராகவும் உள்ளார். சபரீஷ் ஷெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாக, நந்த கிஷோர் கூறினார். இதை நம்பிய சபரீஷ் ஷெட்டி, 22 லட்சம் ரூபாய் கொடுத்தார்.

ஆனால் பட வாய்ப்பு தரவில்லை; பணத்தையும் திரும்ப தரவில்லை. இதுகுறித்து, திரைப்பட வர்த்தக சபையில் புகார் அளிப்பதாக, சபரீஷ் ஷெட்டி கூறியிருந்தார். அதன்படி நேற்று திரைப்பட வர்த்தக சபை தலைவர் நரசிம்மலுவை சந்தித்து புகார் அளித்தார். பல ஆவணங்களையும் அளித்துள்ளார்.

புகாரை பெற்றுக் கொண்ட நரசிம்மலு, இயக்குநர் நந்த கிஷோரை, வர்த்தக சபைக்கு வரவழைத்து விசாரணை நடத்துவதாக கூறியுள்ளார்.

சபரீஷ் ஷெட்டி அளித்த பேட்டி:

நான், நடிகர் சுதீபின் தீவிர ரசிகன். தற்போது நடந்த விஷயம் அவருக்கு தெரிந்திருக்கும். முதலில் ஒரு முறை அவரை சந்திக்க வைத்த நந்த கிஷோர், என் நம்பிக்கையை பெற்றார். அதன் பின் சுதீப்பை நெருக்கத்தில் அறிமுகம் செய்து வைப்பதாக கூறி, பணம் பறித்தார்.

சுதீப் எனக்கு கடவுளை போன்றவர். அவரை நேரில் சந்தித்து புகார் அளிக்கும் அளவுக்கு, சினிமா துறையில் எனக்கு தொடர்புகள் இல்லை. சுதீபுக்கு தெரிந்தாலும் அவரால் என்ன செய்ய முடியும்? அவருக்கும், நந்த கிஷோர் என்னிடம் பணம் வாங்கியதற்கும், எந்த சம்பந்தமும் இல்லை.

தற்போது என் படத்தை திரையிட, என்னிடம் பணம் இல்லை. எனவே நந்த கிஷோர் மீது, நான் புகார் அளித்துள்ளேன். என் பிரச்னை சரியாகும் என, நம்புகிறேன். இல்லையென்றால், சட்டப் போராட்டம் நடத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us