/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய ஏ.சி.பி., - ஏ.எஸ்.ஐ., கைது ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய ஏ.சி.பி., - ஏ.எஸ்.ஐ., கைது
ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய ஏ.சி.பி., - ஏ.எஸ்.ஐ., கைது
ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய ஏ.சி.பி., - ஏ.எஸ்.ஐ., கைது
ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய ஏ.சி.பி., - ஏ.எஸ்.ஐ., கைது
ADDED : மார் 27, 2025 05:32 AM
பெங்களூரு: தனியார் நிறுவன இணையதளத்தை 'ஹேக்' செய்தவரை கைது செய்ய, 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஏ.சி.பி., - ஏ.எஸ்.ஐ., கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரின் எலஹங்காவை சேர்ந்தவர் மதுசூதன். டிசைன் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு நிறுவனத்தின் இணையதள பக்கத்தை மர்ம நபர்கள் 'ஹேக்' செய்தனர்.
நிறுவனம் குறித்து தவறான தகவலை பதிவிட்டனர். இதனால் வடகிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் மதுசூதன் புகார் செய்தார். மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் கைது செய்யப்படவில்லை.
இணையதளத்தை 'ஹேக்' செய்தவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாரிடம், மதுசூதன் கோரிக்கை விடுத்து இருந்தார்.
'ஹேக்கர்களை கைது செய்ய வேண்டும் என்றால், 4 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும்' என, மதுசூதனிடம், ஏ.சி.பி., தன்வீர் கூறினார்.
முதற்கட்டமாக 2 லட்சம் ரூபாய் கொடுக்க மதுசூதன் ஒப்புக்கொண்டார். திடீரென மனம் மாறிய அவர், லோக் ஆயுக்தாவில் புகார் செய்தார்.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு தன்வீருக்கு பதிலாக, ஏ.எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்தி என்பவர், மதுசூதனிடம் இருந்து லஞ்ச பணத்தை வாங்கினார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த லோக் ஆயுக்தா போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கையும், களவுமாக கைது செய்தனர். பின், அவரை தன்வீர் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன்வீரையும் கைது செய்தனர். இருவரிடமும் விசாரணை நடக்கிறது.