Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிவகுமாருக்கு 'குட்டி ரசிகர்'

சிவகுமாருக்கு 'குட்டி ரசிகர்'

சிவகுமாருக்கு 'குட்டி ரசிகர்'

சிவகுமாருக்கு 'குட்டி ரசிகர்'

ADDED : மார் 24, 2025 05:07 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: திருமண நிச்சயதார்த்த விழாவில், துணை முதல்வர் சிவகுமாரின் அருகில் வந்து, 'நான் உங்கள் ரசிகன்' என ஒரு சிறுவன் கூறியதால், அவர் குஷி அடைந்தார்.

பெங்களூரின், தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டலில், வெங்கடேஷ் - காயத்ரி தம்பதியின் மகன் ரஜத் என்பவருக்கு, திருமண நிச்சயதார்த்தம் நேற்று மாலை நடந்தது. இவரது குடும்பத்தினர் துணை முதல்வர் சிவகுமாருக்கு நெருக்கமானவர்கள். எனவே நிச்சயதார்த்த விழாவில் அவர் பங்கேற்றிருந்தார்.

இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் அருகில் ஓடி வந்த 6 வயது சிறுவன், 'ஹாய் சார், நான் உங்கள் ரசிகன்' என கூறினார். இதனால் குஷி அடைந்த சிவகுமார், சிறுவனின் கைகுலுக்கி சிறிது நேரம் பேசினார்.

இது குறித்து, 'எக்ஸ்' தளத்தில் சிவகுமார் கூறியதாவது:

எனக்கு ஒரு குட்டி ரசிகன் இருக்கிறார். குழந்தைகள் கடவுளுக்கு ஒப்பானவர்கள். நிச்சயதார்த்த விழாவில், என்னிடம் வந்த சிறுவன், 'நான் உங்கள் ரசிகன்' என கூறியதை கேட்டு, நான் அளவில்லா ஆனந்தம் அடைந்தேன். இவரை போன்ற குட்டி சிறார்களுக்கு, நானும் ரசிகன். இவர்களே நமது சொத்துகள்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us