Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தேசிய லோக் அதாலத்தில் 78,384 வழக்குகளில் தீர்வு

தேசிய லோக் அதாலத்தில் 78,384 வழக்குகளில் தீர்வு

தேசிய லோக் அதாலத்தில் 78,384 வழக்குகளில் தீர்வு

தேசிய லோக் அதாலத்தில் 78,384 வழக்குகளில் தீர்வு

ADDED : செப் 15, 2025 07:54 AM


Google News
Latest Tamil News
கோலார் : தேசிய லோக் அதாலத் மூலம் கோலார் மாவட்டத்தில் 78,384 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

குடிநீர், மின் கட்டணம், செக் மோசடி, மோட்டார் வாகன விபத்துகள், வங்கி கடன், வட்டித்தொகை, நிதி விவகாரங்கள், குடும்ப பிரச்னைகள் குறித்த வழக்குகளை இரு தரப்பினர் சம்மதத்துடன் தீர்க்க அனைத்து தாலுகா நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் நடந்தது.

இதில், கோலார் மாவட்டத்தில் 78,384 வழக்குகளில் தீர்வு காணப்பட்டன.

 தங்கவயல்: தங்கவயல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகள் 7,544. இதில், 2,398 வழக்குகள் இரு தரப்பு சமரச முயற்சியில் தீர்த்துக்கொள்ள முன் வந்தன. ஆயினும் 2,343 வழக்குகளில் தீர்வு ஏற்பட்டது. கொடுக்கல், வாங்கல், பணப் பிரச்னையில் 1 கோடியே 99 லட்சத்து 93,873 ரூபாய் பைசலானது.

 பங்கார்பேட்டை: பங்கார்பேட்டை தாலுகா நீதிமன்றத்தில் 1,419 வழக்குகளில் தீர்வு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us