Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பசுக்கள், ஆடுகள் திருடிய 4 பேர் கைது

பசுக்கள், ஆடுகள் திருடிய 4 பேர் கைது

பசுக்கள், ஆடுகள் திருடிய 4 பேர் கைது

பசுக்கள், ஆடுகள் திருடிய 4 பேர் கைது

ADDED : ஜூன் 02, 2025 01:42 AM


Google News
தங்கவயல்: கால்நடை திருடர்கள் நால்வரை போலீசார் கைது செய்தனர்.

தங்கவயல், காமசமுத்ரா போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது கால்நடைகள் திருட்டு போவது வழக்கமாக இருந்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு, சரக்கு வாகனம், டிராக்டர் ஆகிய வாகனங்களில் மூன்று சீமை பசுக்கள், நான்கு செம்மறி ஆடுகள், ஐந்து பன்றிகள் ஆகியவற்றை தொட்ட பாணான்ட பள்ளி கிராமத்தில் சிலர் கடத்திச் செல்வதை அறிந்த போலீசார் வழிமறித்து நிறுத்தினர்.

அதே வாகனத்தில் அமர்ந்து வந்த ஆந்திர மாநிலம், சித்துாரின் சுரேஷ், 34, தமிழகத்தின் கிருஷ்ணகிரியின் சதீஷ், 34, ரூபேஷ், 28, வெங்கடரமணப்பா, 34 ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் செயல்பாட்டில் சந்தேகம் எழுந்ததால், 13 லட்சத்து 73 ஆயிரத்து 200 ரூபாய், மதிப்புள்ள கால்நடைகள், இரண்டு வாகனங்களை கைப்பற்றினர். நான்கு பேரையும் காமசமுத்ரா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில், அவர்கள், தமிழகத்தின் பேரகி என்ற இடத்தில் இருந்து கால்நடைகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். கைதான நால்வர் மீது, ஐந்து போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us