/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கர்நாடகாவில் 35 பேருக்கு கொரோனா... பாதிப்பு! பெங்களூரில் மட்டும் 32 பேருக்கு தொற்று கர்நாடகாவில் 35 பேருக்கு கொரோனா... பாதிப்பு! பெங்களூரில் மட்டும் 32 பேருக்கு தொற்று
கர்நாடகாவில் 35 பேருக்கு கொரோனா... பாதிப்பு! பெங்களூரில் மட்டும் 32 பேருக்கு தொற்று
கர்நாடகாவில் 35 பேருக்கு கொரோனா... பாதிப்பு! பெங்களூரில் மட்டும் 32 பேருக்கு தொற்று
கர்நாடகாவில் 35 பேருக்கு கொரோனா... பாதிப்பு! பெங்களூரில் மட்டும் 32 பேருக்கு தொற்று

முதல்வர் உஷார்
இந்த இரண்டு சம்பவங்களும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், யாரும் பயப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்தது. அதே சமயம் கடந்த 24ம் தேதி, மைசூரில் நடந்த இந்திரா கேன்டீன் திறப்பு விழாவில், முதல்வர் சித்தராமையா முக கவசத்துடன் கலந்து கொண்டார். இதுவும் பேசும் பொருளாக மாறியது. இச்சம்பவம் கொரோனா உண்மையிலே வேகமாக பரவுகிறதா என பார்ப்போர் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியது.
முதல் மரணம்
இந்நிலையில், பெங்களூரு ஒயிட்பீல்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 85 வயது முதியவர், உறுப்பு செயலிழப்பு, சுவாச கோளாறு காரணமாக கடந்த 17ம் தேதி உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பரிசோதனை கட்டாயம்
சுவாச கோளாறு பிரச்னை உள்ளவர்கள், முதியவர்கள், கர்ப்பிணியர் கட்டாயமாக பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்றால் பாதிகப்பட்ட 85 வயது முதியவர் உயிரிழந்து உள்ளார். ஆனால், அவர் கடந்த ஒரு ஆண்டாக நோய் வாய்ப்பட்டிருந்தார். இருப்பினும், கொரோனா காரணமாக தான் இறந்தாரா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.