/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாயமான வாலிபர் கொலை காதலி உட்பட 3 பேர் கைது மாயமான வாலிபர் கொலை காதலி உட்பட 3 பேர் கைது
மாயமான வாலிபர் கொலை காதலி உட்பட 3 பேர் கைது
மாயமான வாலிபர் கொலை காதலி உட்பட 3 பேர் கைது
மாயமான வாலிபர் கொலை காதலி உட்பட 3 பேர் கைது
ADDED : ஜூன் 15, 2025 11:12 PM
கலபுரகி: மாயமானதாக தேடப்பட்டு வந்த வாலிபரை கொலை செய்து உடலை ஆற்றில் வீசியது தெரிந்து உள்ளது. ஐந்து மாதங்களுக்கு பின் காதலி, சகோதரர், தாய் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கலபுரகி ஆலந்த் தாலுகா கஜூரி கிராமத்தில் வசித்தவர் ராகுல், 25. கடந்த ஜனவரி 30ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின், வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.
பெற்றோர் அளித்த புகாரில் ராகுலை, ஆலந்த் போலீசார் தேடி வந்தனர். ராகுல் கடைசியாக யாரிடம் பேசினார் என்று, அவரது மொபைல் நம்பரை வைத்து, போலீசார் விசாரித்த போது, அனுார் கிராமத்தின் பாக்யவந்தி, 22 என்ற இளம்பெண்ணிடம் பேசியதும், அவர்கள் இருவரும் காதலித்ததும் தெரிந்தது.
ராகுல் மாயமானதில் இருந்து பாக்யவந்தி, அவரது சகோதரர் பிரித்விராஜ், தாய் சீதாபாய் ஆகியோரும் காணாமல் போயினர். மூன்று பேரின் மொபைல் நம்பரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மூன்று பேரும் சொந்த ஊருக்கு வந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆலந்த் போலீசார் விரைந்து சென்று மூன்று பேரையும் பிடித்தனர். ராகுலை பற்றி விசாரித்த போது அவரை கொலை செய்து, உடலை ஆற்றில் வீசியது தெரிந்தது. மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். மேற்கொண்டு நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.
அதாவது ராகுலும், பாக்யவந்தியும் காதலித்தது பற்றி, பிரித்விராஜுக்கு தெரிந்த பின், காதலை கண்டித்தார். இருவரும் காதலை கைவிடவில்லை. கடந்த ஜனவரி 30 ம் தேதி இரவு ஆலந்த்தில் நடந்த திருவிழாவுக்கு பிரித்விராஜ், சீதாபாய் புறப்பட்டு சென்றனர். வீட்டில் தனியாக இருந்த பாக்யவந்தி, காதலன் ராகுலை மொபைல் போனில் பேசி தனது வீட்டிற்கு வரவழைத்தார்.
அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்து உள்ளனர். திடீரென வீட்டிற்கு பிரித்விராஜ் வந்து விட்டார். தங்கையை தாக்கியதுடன், ராகுலை கழுத்தை நெரித்து கொலை செய்தார். 'இதுபற்றி வெளியே கூறினால், உன்னையும் கொன்று விடுவேன்' என்று தங்கையை மிரட்டி உள்ளார்.
பின், தனது நண்பர் ஒருவரை மொபைல் போனில் அழைத்தார். பிரித்விராஜும், நண்பரும் சேர்ந்து ராகுல் உடலை பைக்கில் எடுத்து சென்று, உடலில் கல்லை கட்டி கால்வாயில் வீசி உள்ளனர்.
பின் வீட்டிற்கு வந்த பிரித்விராஜ், தங்கை, தாயை அழைத்து கொண்டு, உத்தர பிரதேசத்தில் நடந்த கும்பமேளாவில் பங்கேற்க புறப்பட்டு சென்றதும், காசி, அயோத்தி உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு சென்றதும் தெரிந்து உள்ளது. தலைமறைவாக உள்ள பிரித்விராஜின் நண்பரை போலீசார் தேடிவருகின்றனர்.