/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கடலோர மாவட்டங்களுக்கு 3 நாள் கனமழை எச்சரிக்கை கடலோர மாவட்டங்களுக்கு 3 நாள் கனமழை எச்சரிக்கை
கடலோர மாவட்டங்களுக்கு 3 நாள் கனமழை எச்சரிக்கை
கடலோர மாவட்டங்களுக்கு 3 நாள் கனமழை எச்சரிக்கை
கடலோர மாவட்டங்களுக்கு 3 நாள் கனமழை எச்சரிக்கை
ADDED : ஜூன் 16, 2025 07:17 AM
பெங்களூரு : 'இன்று முதல் மூன்று நாட்கள், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்' என்று, வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
கர்நாடகா வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
அரபிக்கடலில் ஏற்பட்டு உள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக, கர்நாடகாவின் கடலோர, வடமாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று முதல் மூன்று நாட்கள் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடாவில் கனமழை அல்லது அதிக கனமழை பெய்யும்.
வடமாவட்டங்களான பெலகாவி, தார்வாட், ஹாவேரியில் கனமழையும், பீதர், பாகல்கோட், கொப்பால், கதக், கலபுரகி, விஜயபுரா, ராய்ச்சூர், யாத்கிர் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி 24 மணி நேரத்தில், தட்சிண கன்னடாவின் மங்களூரு தாலுகா புது கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 18.95 செ.மீ., மழை பெய்து உள்ளது. நீர்மார்க்கம் பகுதியில் 18.05 செ.மீ., மழையும்; மேரமஜலுவில் 17.4 செ.மீ., மழையும்; பாலாவில் 16.55 செ.மீ., மழையும் பெய்து உள்ளது.