/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 2 போலீஸ்காரர்கள் கைது ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 2 போலீஸ்காரர்கள் கைது
ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 2 போலீஸ்காரர்கள் கைது
ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 2 போலீஸ்காரர்கள் கைது
ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 2 போலீஸ்காரர்கள் கைது
ADDED : மே 30, 2025 11:08 PM
பெங்களூரு: ஐ.பி.எல்., டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்ற, இரண்டு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 17ம் தேதி பெங்களூரு - கோல்கட்டா அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடந்தது.
அன்றைய தினம் மதியம் விஜயநகரில் உள்ள நாச்சிகேதா பார்க் பகுதியில், ஐ.பி.எல்., டிக்கெட்டை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்ற சுரேஷ், சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹலசூரு போலீஸ் நிலைய போலீஸ்காரர் ரவிசந்திரா, போக்குவரத்து மேலாண்மை மைய போலீஸ்காரர் வெங்கடகிரி கவுடா ஆகியோருக்கும், கள்ளச்சந்தையில் ஐ.பி.எல்., டிக்கெட் விற்றதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து, குறைந்த விலை டிக்கெட்டுகளை 6,000 ரூபாய் வரை கள்ளச்சந்தையில் விற்றது தெரிய வந்தது. நேற்று முன்தினம் போலீஸ்காரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இருவரையும் சஸ்பெண்ட் செய்து, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று உத்தரவிட்டார்.