/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மஹா., ஆந்திரா செல்லும் 10 ரயில்கள் நிறுத்தம் மஹா., ஆந்திரா செல்லும் 10 ரயில்கள் நிறுத்தம்
மஹா., ஆந்திரா செல்லும் 10 ரயில்கள் நிறுத்தம்
மஹா., ஆந்திரா செல்லும் 10 ரயில்கள் நிறுத்தம்
மஹா., ஆந்திரா செல்லும் 10 ரயில்கள் நிறுத்தம்
ADDED : மே 12, 2025 06:55 AM
பெங்களூரு: 'தர்மாவரத்தில் ரயில்வே பணிகள் நடப்பதால், மஹாராஷ்டிரா, ஆந்திரா செல்லும் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள, சில ரயில்கள் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன' என தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
ரத்து
எண் 16571: யஷ்வந்த்பூர் - பீதர் விரைவு ரயில், மே 12, 13, 15லும்;
எண் 16571: பீதர் - யஷ்வந்த்பூர் விரைவு ரயில் மே 12, 13, 14, 16லும்;
எண் 16583: யஷ்வந்த்பூர் - மஹாராஷ்டிராவின் லட்டூர் விரைவு ரயில் மே 14, 16, 17 லும்;
எண் 16584: லட்டூர் - யஷ்வந்த்பூர் விரைவு ரயில், மே 15, 17, 18லும்;
எண் 11311 / 11312: சோலாப்பூர் - ஹாசன் - சோலாப்பூர் விரைவு ரயில் இன்று முதல் மே 17 வரையிலும்;
எண் 06595 / 06596: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - தர்மாவரம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு மெமு ரயில், இன்று முதல் மே 17 வரையிலும்;
எண் 77213: குண்டக்கல் - ஹிந்துப்பூர் டெமு ரயில் இன்று முதல் மே 17 வரையிலும்;
எண் 77214: ஹிந்துப்பூர் - குண்டக்கல் டெமு ரயில், இன்று முதல் மே 18 வரையிலும் ரத்து செய்யப்படுகின்றன.
வழித்தடம் மாற்றம்
எண் 16591 / 16592: எஸ்.எஸ்.எஸ். ஹூப்பள்ளி - மைசூரு - எஸ்.எஸ்.எஸ்.ஹூப்பள்ளி ஹம்பி விரைவு ரயில், வரும் 17 ம் தேதி வரை பல்லாரி, ராய்துர்க், சிக்கஜாஜுர், யஷ்வந்த்பூர் வழியாக இயங்கும். வழக்கமான குண்டக்கல் - எலஹங்கா இடையேயான ரயில் நிலையங்களில் நிற்காது.
எண் 16532 கே.எஸ்.ஆர்., பெங்களூரு - ராஜஸ்தானின் அஜ்மிர் காரிப் நவாஸ் வாராந்திர விரைவு ரயில் மே 16ம் தேதி யஷ்வந்த்பூர், சிக்கஜாஜுர், ராயதுர்க், பல்லாரி, ஹூப்பள்ளி வழியாக செல்லும். வழக்கமான குண்டக்கல் - ஹிந்துப்பூர் இடையேயான ரயில் நிலையங்களில் நிற்காது.
எண் 16531: அஜ்மிர் காரிப் நவாஸ் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு விரைவு ரயில், ஹூப்பள்ளி, பல்லாரி, ராய்துர்க், சிக்கஜாஜுர், யஷ்வந்த்பூர் வழியாக செல்லும். வழக்கமான குண்டக்கல் - ஹிந்துப்பூர் இடையேயான ரயில் நிலையங்களில் நிற்காது.
எண் 16533: ராஜஸ்தான் பகத் கி கோடி - கே.எஸ்.ஆர்., பெங்களூரு வாராந்திர விரைவு ரயில், மே 14ம் தேதி, பல்லாரி, ராயதுர்க், சிக்கஜாஜுர், யஷ்வந்த்பூர் வழியாக செல்லும். வழக்கமான குண்டக்கல் - ஹிந்துப்பூர் இடையேயான ரயில் நிலையங்களில் நிற்காது.
எண் 12592: யஷ்வந்த்பூர் - கோரக்பூர் வாராந்திர விரைவு ரயில், இன்று சிக்கஜாஜுர், ராய்துர்க், பல்லாரி, குண்டக்கல் பைபாஸ், ராய்ச்சூர் வழியாக செல்லும். ஹிந்துப்பூர் - குண்டக்கல் இடையேயான ரயில் நிலையங்களில் நிற்காது.
எண் 22831: மேற்குவங்கும் ஹவுரா - யஷ்வந்த்பூர் வாராந்திர விரைவு ரயில், மே 14ம் தேதி தோனே, குண்டக்கல், பல்லாரி, ராய்துர்க், சிக்கஜாஜுர் வழியாக செல்லும். வழக்கமான அனந்தபூர் - எலஹங்கா இடையேயான ரயில் நிலையங்களில் நிற்காது.
எண் 22602: சாய்நகர் ஷிருடி - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், மே 16ம் தேதி கூடி, ரேணுகுன்டா வழியாக செல்லும். வழக்கமான அனந்த்பூர் - காட்பாடி இடையேயான ரயில் நிலையங்களில் நிற்காது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.