Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு ஏ.டி.எம்.,மில் ரூ.16.56 லட்சம் கொள்ளை

பெங்களூரு ஏ.டி.எம்.,மில் ரூ.16.56 லட்சம் கொள்ளை

பெங்களூரு ஏ.டி.எம்.,மில் ரூ.16.56 லட்சம் கொள்ளை

பெங்களூரு ஏ.டி.எம்.,மில் ரூ.16.56 லட்சம் கொள்ளை

ADDED : ஜூலை 09, 2024 03:59 AM


Google News
பெல்லந்துார், : போர்வை போர்த்தி ஏ.டி.எம்.,மில் நுழைந்த மர்ம கும்பல், லட்சக்கணக்கான ரூபாயை கொள்ளையடித்தது.

பெங்களூரில் சில ஆண்டுகளுக்கு முன், 'பெட்ஷீட் கேங்' மக்களுக்கும், போலீசாருக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. போர்வையால் உடல், முகத்தை மறைத்து கொண்டு வீடுகள், ஏ.டி.எம்., மையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளை அடித்தனர்.

போலீசாரின் கடுமையான நடவடிக்கையால், இந்த கும்பலின் தொந்தரவு கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில் இந்த கும்பல், மீண்டும் தலை துாக்கியுள்ளது. பெங்களூரு பெல்லந்துாரின் தொட்டகன்னஹள்ளியில் 'ஆக்சிஸ் வங்கி'யின் ஏ.டி.எம்., மையம் உள்ளது.

நேற்று அதிகாலை 3:30 மணியளவில், பெட்ஷீட் போர்த்திய மர்ம கும்பல், இந்த ஏ.டி.எம்.,மில் புகுந்தது. தங்களின் அடையாளம் தெரிந்து விடாமல் இருப்பதற்காக, கண்காணிப்பு கேமராவில், கருப்பு ஸ்ப்ரே அடித்தனர்.

அதன்பின் காஸ் கட்டரால், ஏ.டி.எம்., இயந்திரத்தை வெட்டி, அதில் வைக்கப்பட்டிருந்த 16.56 லட்சம் ரூபாயை திருடிக்கொண்டு தப்பியோடினர். கொள்ளையர்கள் பெட்ஷீட்டை சுற்றிக் கொண்டு ஏ.டி.எம்., இயந்திரத்துக்குள் நுழையும் காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

ஏ.டி.எம்.,மில் கொள்ளை நடந்திருப்பதை நேற்று காலை பார்த்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் அங்கு வந்த பெல்லந்துார் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரிக்கின்றனர்.

கொள்ளையர்கள் எந்த சாலை வழியாக வந்தனர் என்ற தகவலை தெரிந்து கொள்ள, சுற்றுப்பகுதி சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us