/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஓராண்டில் 2.30 லட்சம் வீடுகள் அமைச்சர் ஜமீர் அகமது கான் தகவல் ஓராண்டில் 2.30 லட்சம் வீடுகள் அமைச்சர் ஜமீர் அகமது கான் தகவல்
ஓராண்டில் 2.30 லட்சம் வீடுகள் அமைச்சர் ஜமீர் அகமது கான் தகவல்
ஓராண்டில் 2.30 லட்சம் வீடுகள் அமைச்சர் ஜமீர் அகமது கான் தகவல்
ஓராண்டில் 2.30 லட்சம் வீடுகள் அமைச்சர் ஜமீர் அகமது கான் தகவல்
ADDED : மார் 14, 2025 06:59 AM

பெங்களூரு: ''அடுத்த ஓராண்டில், 2.30 லட்சம் வீடுகள் கட்டி பயனாளிகளுக்கு வழங்கப்படும்,'' என, மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர்கள் நவீன், சங்கனுார் கேள்விகளுக்கு பதிலளித்து, அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியதாவது:
பசவா குடியிருப்பு, அம்பேத்கர் நிவாஸ், தேவராஜ் அர்ஸ் குடியிருப்பு, பிரதமர் ஆவாஸ் உட்பட, வெவ்வேறு திட்டங்களின் கீழ், 9.5 லட்சம் வீடுகள் கட்ட வேண்டியுள்ளது. பணிகள் முழுமை அடைய, 13,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை தேவைப்படும்.
கொஞ்சம் கொஞ்சமாக வீடுகள் கட்டப்படும். அடுத்த ஓராண்டில் 2.30 லட்சம் வீடுகள் கட்டி, பயனாளிகளுக்கு வழங்கப்படும். 2024 - 25ல் ஒரு வீடும் வழங்கப்படவில்லை. அந்த ஆண்டு மூன்று லட்சம் வீடுகள் கட்டி முடிக்க, முடிவு செய்யப்பட்டது. இதுவரை 1,49,521 வீடுகள் முடிந்துள்ளன.
கடந்த ஆண்டில் மத்திய அரசின் பிரதமர் ஆவாஸ் திட்டத்தில், கிராமப்புறங்களில் 7.03 லட்சம் ரூபாய் செலவில் வீடுகள் கட்ட வேண்டும். இதில் மத்திய, மாநில அரசுகள் மூன்று லட்சம் ரூபாய் மானியம் வழங்கும். மிச்ச தொகையை பயனாளிகள் செலவிட்டு வீடு கட்ட வேண்டும். ஏழைகளால் இவ்வளவு செலவிட முடியாமல் கஷ்டப்படுகின்றனர். எனவே திட்டங்கள் முடிய தாமதம் ஆகிறது. இதுவரை 1.17 லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு குடியிருப்பு திட்டத்தின் கீழ், வழங்கப்படும் நிதியுதவியை அதிகரிக்க வேண்டும் என, அரசிடம் வேண்டுகோள் வந்துள்ளது. இது தொடர்பாக, முதல்வருடன் ஆலோசிக்கப்பட்டது.
நிதியுதவியை அதிகரிக்கும்படி முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தோம். இவ்விஷயத்தில் அரசுக்கும் ஆர்வம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.