Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மைசூரு காகித ஆலையை குத்தகைக்கு விட அரசு முடிவு

மைசூரு காகித ஆலையை குத்தகைக்கு விட அரசு முடிவு

மைசூரு காகித ஆலையை குத்தகைக்கு விட அரசு முடிவு

மைசூரு காகித ஆலையை குத்தகைக்கு விட அரசு முடிவு

ADDED : மார் 14, 2025 11:37 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: ''மைசூரு காகித ஆலையை தனியாருக்கு குத்தகைக்கு விட அரசு முடிவு செய்து உள்ளது,'' என, மாநில தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:

பத்ராவதி காங்., - எம்.எல்.ஏ., சங்கமேஸ்வர்: என் தொகுதியில் உள்ள மைசூரு காகித ஆலை மூடப்பட்டுள்ளது.

இதனால் பத்ராவதி மக்கள் வேறு வேலை தேடிவருகின்றனர். ஆலையை மீண்டும் துவங்கும் திட்டம் அரசிடம் உள்ளதா?

தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல்: 2016 முதல் தொழிற்சாலையின் அனைத்து உற்பத்தி அலகுகளும் மூடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி நிலவரப்படி 1,541 கோடி ரூபாய் தொழிற்சாலைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இ - டெண்டருக்கு அழைப்பு விடுத்தும் யாரும் முன்வரவில்லை. தொழிற்சாலை நிலத்தில் நீலகிரி மரங்களை வளர்ப்பதற்கு இடம் வழங்குவது தொடர்பாக, தலைமை செயலர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.

தொழிற்சாலை செலுத்த வேண்டிய மின் கட்டண அசல் தொகை, வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்று மெஸ்காம் கூறி உள்ளது.

ஆலையில் பணியாற்றிய 202 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு இழப்பீடு மற்றும் பிற சட்டபூர்வ நிலுவை தொகை செலுத்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலை செயல்பாடுகளை நிர்வகிக்கும் பொறுப்பை, தனியாரிடம் குத்தகைக்கு விட அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us