/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு - லண்டன் விமானம் வாரத்தில் 5 நாள் சேவை துவக்கம் பெங்களூரு - லண்டன் விமானம் வாரத்தில் 5 நாள் சேவை துவக்கம்
பெங்களூரு - லண்டன் விமானம் வாரத்தில் 5 நாள் சேவை துவக்கம்
பெங்களூரு - லண்டன் விமானம் வாரத்தில் 5 நாள் சேவை துவக்கம்
பெங்களூரு - லண்டன் விமானம் வாரத்தில் 5 நாள் சேவை துவக்கம்
ADDED : ஜூன் 15, 2024 04:12 AM

பெங்களூரு: பெங்களூரில் இருந்து லண்டனுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் நேரடி விமான சேவையை, ஆக., 18 ல் 'ஏர் இந்தியா' நிறுவனம் துவக்குகிறது.
டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனம், பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் நாட்டின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான லண்டனில் உள்ள, 'காட்விக்' விமான நிலையத்துக்கு, வாரத்தில் ஐந்து நாட்களுக்கு விமானங்களை இயக்குகிறது.
ஆக., 18ம் தேதி முதல் பெங்களூரில் இருந்து 'ஏஐ 177' என்ற விமானம், மதியம் 1:05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 7:05 மணிக்கு லண்டனின் காட்விக் விமான நிலையத்துக்கு சென்றடையும்.
மறுமார்க்கமாக அங்கிருந்து 'ஏஐ 178' என்ற விமானம், காட்விக் விமான நிலையத்தில் இருந்து இரவு 8:35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:50 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.
இந்த விமானம் செவ்வாய், சனிக்கிழமையை தவிர்த்து, மற்ற நாட்களில் இயக்கப்படும்.
இவ்விரு வழித்தடத்தில், 'போயிங் 787 டிரீம் லைனர்' விமானம் இயக்கப்படுகிறது. வர்த்தக வகுப்பில் 18 படுக்கை வசதியுடன் கூடிய இருக்கைகளும்; எகானமி வகுப்பில் 238 இருக்கைகளும் இருக்கும். இந்த விமானம், எங்கும் நிறுத்தாமல், நேரடியாக காட்விக் விமான நிலையம் சென்றடையும்.
'பிரிட்டனில் இருந்து பெங்களூருக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், போயிங் விமானங்கள் இயக்க பயணியரிடம் இருந்து கோரிக்கை வந்ததாலும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது' என, ஏர் இந்தியா விமான நிறுவன நிர்வாக இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான காம்பெல் வில்சன் தெரிவித்தார்.