/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு -- மைசூரு பத்து வழி சாலையில் விபத்தை குறைக்க ஐ.டி.எம்.எஸ்., கேமராக்கள் பெங்களூரு -- மைசூரு பத்து வழி சாலையில் விபத்தை குறைக்க ஐ.டி.எம்.எஸ்., கேமராக்கள்
பெங்களூரு -- மைசூரு பத்து வழி சாலையில் விபத்தை குறைக்க ஐ.டி.எம்.எஸ்., கேமராக்கள்
பெங்களூரு -- மைசூரு பத்து வழி சாலையில் விபத்தை குறைக்க ஐ.டி.எம்.எஸ்., கேமராக்கள்
பெங்களூரு -- மைசூரு பத்து வழி சாலையில் விபத்தை குறைக்க ஐ.டி.எம்.எஸ்., கேமராக்கள்
ADDED : ஜூன் 26, 2024 09:05 AM

பெங்களூரு : பெங்களூரு -- மைசூரு பத்து வழி சாலையில் விபத்தை குறைக்க, ஐ.டி.எம்.எஸ்., கேமராக்கள் ஜூலை 1ம் தேதி முதல் நிறுவப்படுகின்றன.
பெங்களூரில் இருந்து மைசூருக்கு பத்து வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் பயணித்து 75 நிமிடங்களில் இரு நகரங்களையும் கடக்கலாம். முதலில் இந்த சாலையில் வேகக்கட்டுப்பாடு எதுவும் இல்லை. வாகனங்கள் சீறி பாய்ந்து சென்றதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் அதிகரித்தன.
அதிநவீன கேமரா
இதனால், இந்த சாலையில் வாகனங்கள் செல்ல வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 100 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
அதற்கு மேல் வாகனங்கள் வேகமாக சென்றால், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில், பத்து வழி சாலையில் பல இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
இந்த கேமராக்கள், வேகமாக செல்லும் வாகனங்களை புகைப்படம் எடுக்கும். அதன் மூலம் வாகன ஓட்டிகளிடம் போலீசார் அபராதம் வசூலித்து வந்தனர்.
இந்நிலையில், 'பத்து வழி சாலையில் வேகக் கட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், ஐ.டி.எம்.எஸ்., எனும் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை கேமராக்கள் பொருத்தும் பணி வரும் 1ம் தேதி முதல் துவங்கும்' என்று, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அலோக்குமார் கூறியுள்ளார்.
அபராத ரசீது
இந்த அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், வேகமாக செல்லும் வாகனங்களை புகைப்படம் எடுப்பதுடன், வாகன ஓட்டிகளுக்கு அபராத ரசீதையும் அனுப்பி வைக்கும்.
பெங்களூரு நகருக்குள் 50 நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை கேமராக்கள் கடந்த 2022ல் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.