Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/விதைப்பண்ணை மானியம்

விதைப்பண்ணை மானியம்

விதைப்பண்ணை மானியம்

விதைப்பண்ணை மானியம்

PUBLISHED ON : ஜூன் 12, 2024


Google News
Latest Tamil News
விதை என்பது பயிர்களின் மறு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உயிர் ஆதாரம். விவசாய இடுபொருட்களில் தவிர்க்க முடியாத சக்தி.

பயிரின் சிறந்த விளைச்சலுக்குத் தரமான விதையே மூலதனம். தரமான விதை என்பது, பாரம்பரிய குணங்களில் சிறிதும் மாறாமலும் தன் இனப்பயிர், பிறபயிர் மற்றும் களை விதைகள் கலக்காமலும் இருக்க வேண்டும். பூச்சி பூஞ்சை தாக்காமலும் துாசி துரும்பு இல்லாமல் விதைத்தவுடன் முளைத்து செழிப்பாக ஒரே மாதிரியாக வளரக்கூடியதாக இருக்க வேண்டும்.

விவசாயிகள் தங்கள் நிலத்தின் பரப்பளவு, தட்பவெப்பநிலை, நீர்ப்பாசன வசதி, போக்குவரத்து வசதி மற்றும் விதை சேமிப்பு வசதிகளை ஆராய்ந்த பின்பே விதை உற்பத்தி செய்யவேண்டும். இத்தகைய நிலத்தை விவசாயிகள் விதைப்பண்ணைக்கு பதிவு செய்யலாம். இவ்வாறு விதைப்பண்ணையாக பதிவு செய்யப்பட்டு விதைச்சான்று நடைமுறைகளைப் பின்பற்றி விதை உற்பத்தி செய்து தரும் விவசாயிக்கு அரசு மானியம் வழங்கி ஊக்கப்படுத்துகிறது.

நீர் ஆதாரம் தேவை

தரமான விதை உற்பத்தி செய்வதற்கு போதுமான அளவு நீர் ஆதாரம் முக்கியம். நிலம் தயாரிப்பு முதல் அறுவடை வரை பயிர்வளர்ச்சிக்குத் தேவையான நீர்ப் பாசன வசதி இருந்தால் விதைப்பண்ணை அமைக்கலாம்.

விதை உற்பத்தி

விதையின் தரத்தை கண்காணிக்க தமிழக அரசு விதைச்சான்று, 2. விதைப் பரிசோதனை, விதை ஆய்வு (விதைச் சட்டம்) நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது. தரமான விதைப்பண்ணை அமைத்து விதை உற்பத்தி செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள விதைச்சான்று அலுவலகத்தில் பதிவு செய்து பயனடையலாம். விதை மாதிரிக்கு ரூ.80 கட்டணம் செலுத்தினால் போதும். விதையின் முளைப்புத்தன்மை அறிந்து விதைக்கும் போது கூடுதல் லாபம் கிடைக்கும். அரசு விதைப்பரிசோதனை நிலையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுகிறது.

- மகாலட்சுமி, விதைப் பரிசோதனை அலுவலர் ஜானகி, சாய்லட்சுமி சரண்யாவேளாண்மை அலுவலர்கள்விதைப்பரிசோதனை நிலையம், விருதுநகர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us